என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.
- பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம். சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் பூட்டலாம் என்று பழமொழிகள் கூறுகின்றன. கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும்.
இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது.
4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப் படும் நாட்களும் அதிகமாகின்றன.
இவற்றை எல்லாம் நீக்கி மண் வளத்தை காக்க நடவு நிலத்தை தயார் செய்ய நீரின் தேவையை குறைக்க, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழுக்களை மேற்பரப்பில் தள்ளி, பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.
கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணில் உள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகிறது. அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகிறது.
அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். சாரணை, மஞ்சக்கடுகு, நாயுருவி, தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை களைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. கோடை உழவு செய்வதால் இந்த களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது.
பயிர் அறுவடைக்கு பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது.
கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமான நிலங்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வெங்கடேசுக்கு ''ஹலோ போலீஸ்'' கொடுத்த தகவல் மூலம் அங்கு வந்தார். அவர் தம்பதியினரிடம் சண்டை போட வேண்டாம், போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கு ஆனந்தராஜ் எங்க குடும்ப பிரச்சினையில் தலையிட நீ யாருடா? என்று தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் இங்கிருந்து செல்லா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வெங்கடேஷ் கமுதி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தராஜை கைது செய்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘குடிமக்கள் கணக்கு எண்’’ பிழைதிருத்தம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
- இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.
அபிராமம்
கோடைவிடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும்போது அங்கு புதிதாக மாணவ-மாணவிகளை சேர்க்கவும், மேல்வகுப்புகள் படிக்கவும் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள் தேவையாகும். இந்த சான்றிதழ்கள் பெற ''குடிமக்கள் கணக்கு எண்'' கட்டாயமாக தேவைப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. காப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது. இங்கு சான்றிதழ் பதிவு செய்ய வரும் மாணவ- மாணவிகள் சி.ஏ.என். நம்பர் பிழைதிருத்தம் செய்ய வேண்டும்.
ஆனால் அந்த வசதி இ-சேவை மையங்களில் கிடையாது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மன உைளச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு வருவாய்துறை சான்றிதழ்கள் பதிவு செய்ய ஆதார் எண் வைத்து ''குடிமக்கள் கணக்கு எண்'' (சி.ஏ.என்.) உருவாக்கம் செய்யப்படும். இந்த எண் உருவாக்கம் செய்ய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்படுவதுடன் நேர விரயம், பண விரயம் உள்பட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாவதுடன் சான்றிதழ் கிடைப்பதிலும் சிரமத்துடன் அலைய வேண்டியதுள்ளது. இந்த நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது44). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் காரில் தஞ்சாவூருக்கு புறப்பட்டார். காரை தஞ்சையை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டினார். நேற்று தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் ஊருக்கு புறப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு கார் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகில் உள்ள பழங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதியினர் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த தில்லைநாயகி (வயது58), அருண்குமார்(32), ஜெசிந்தன்(11), ஹாரூன்(7), ஹேமவர்த்தன்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ரவிசங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடுகுசந்தை ஊராட்சியில் நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.
- காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து. இவர் முன்னாள் அ.தி.மு.க. கடலாடி ஒன்றிய கவுன்சிலராகவும், 25 வருட மாக சத்திரம் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். கடுகு சந்தை ஊராட்சித்தலைவர் காளிமுத்து கூறுகையில்:-
கடுகு சந்தை ஊராட்சியில் மினி பாரஸ்ட் என ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மெகா பாரஸ்ட் என 5 ஆயிரம் மரக் கன்றுகள் வளர்த்து கடுகு சந்தை ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றி உள் ளேன். இந்த கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட் டம் தேவர்நகர், கடுகுசந்தை பகுதிகளுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவர்நகர் உயர் நிலைப்பள்ளி, தொடக்கப்ப ள்ளியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.
தேவர் நகர் உயர்நிலைப் பள்ளி சமையலறை கட்டிடத்திற்கு ரூ.7.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்தி ரம் கிராமத்தில் இருந்து கூரான்கோட்டை செல்லும் சாலை அருகே புதிய ஊருணி அமைத்து படித்துறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடுகு சந்தை ஊராட்சி சத்திரம், நடுத்தெரு, மேற்கு தெரு, கிழக்குத் தெரு, பகுதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக் கப்பட்டுள்ளது.
கடுகுசந்தை ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் 5லட்சம்பனை மரங்கள் உள்ளன. ஆகையால் பனை தொழி லாளர்களுக்காக கடுகு சந்தை ஊராட்சி யில் பனங்கற்கண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். சத்திரம் பகுதியில் ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் செல் லும் பக்தர்கள் சத்திரத்தில் உள்ள ராஜாசத்திரம் பகுதியில் தங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக சத்திரத்தில் உள்ள ராஜா ஊரு ணிக்கு படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
சத்திரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம், கடுகுசந்தை, முத்துராம லிங்கபுரம், தேவர் நகர், ஆதிதிராவிடர் காலனி, ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்டித் தரவேண்டும். கண்மாய்களை தூர் வாரி, மடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருவிளக்குகள் விஸ்தரிப்பு செய்து தர வேண்டும்.
நெல் உலர்க்களம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். கடுகுசந்தை ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வா ய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது. அதனை தூர்வாரி கடுகு சந்தை ஊராட்சியில் உள்ள கண் மாய்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கீழக்கரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கடந்த 15 நாட்களாக மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேஷ் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் தடகளம், ஓட்டப்பந்தயம், குழு விளையாட்டுப் போட்டிகள், கைப்பந்து என பல பயிற்சிகளில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
- வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது.
வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- இதரஅனைத்து வித உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டஅளவில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ''மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்'' நடைபெற உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதால் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாதவர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்தஅடையாளஅட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வும்,
- ராமநாதபுரம் அருகே கிராமிய கபடி போட்டி நடந்தது.
- பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது.
கீழக்கரை
ராமநாதபுரம் அருகில் உள்ள பால்க்கரை கிராமத்தில் சமூக ஆர்வலர் அலெக்சின் 12-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலெக்சின் வெள்ளி நிலா, காந்தாரி அம்மன் கபடி கழகம், பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது. இதில் முதல் பரிசு
ரூ. 50 ஆயிரத்தை அலெக்சின் வெள்ளி நிலா பால்க்கரை அணியும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ஆய்க்குட்டி தேசிய பறவை அணியும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை சாமிப்பட்டி லவ் பேர்ட்ஸ் அணியும் பெற்றன.
இதில் ராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் கே.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.மடை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்து முருகன், அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், பால்க்கரை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் சிங்கப்பூர் சிவசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் பாலமுருகன், தங்க நகை தயாரிப்பாளர் சிவக்குமார், ராஜீவ்காந்தி, பால்க்கரை கேங்குராஜ், நவநீதன், முனியப்பா,தினேஷ்,வைசவா,கூரி,ரவி பத்மநாபன்,அஜித்குமார், சசிகுமார், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- ராமநாதபுரம் அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி பேசினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோவிலாங்குளம், சம்பகுளம், முதல்நாடு, கே.வேப்பங்குளம், குண்டுகுளம், தரைக்குடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பொய்த்தால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோடை உழவு பணி செய்கின்றனர். கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி கூறுகையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் தளர்ந்து சரியாக நிலைப்படுத்தப்படும். மழைநீர் மண்ணின் உள்ளே ஊடுருவதற்கு ஏதுவாக இருக்கும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மக்காத சருகுகள் மக்கி மண்ணில் அங்கக சத்து மேம்படும். கீழ் மண் மேலே புரட்டி விடப்படுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், கிருமிகள் போன்றவை சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும் களைச் செடிகள் களையப்படுவதால் வெயிலில் காய்ந்து பயிரிடும் போது களைகள் குறைவாக இருக்கும். பயிர் பூச்சி,நோய், களை மேலாண்மை செலவுகள் குறைக்கப்படும். இதனால் விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.
- ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர்உதவித்தொகை, பட்டாபெயர்மாற்றம் உள்ளிட்டகோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன. இதில் கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோவில் வருடா பிஷேகத்தை முன்னிட்டு பூஞ்சிட்டு, சின்ன மாடு, நடுமாடு ஆகிய 3 பிரிவு களாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் வில்வ லிங்கத்தின் மாடும், 2-வது பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடும், 3-வது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதாவின் மாடும் பெற்றன.
நடுமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடும், 2-வது பரிசை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மாடும், 3-வது பரிசை பூலாங்கால் காதர்பாட்ஷா மாடும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்தரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத் துறை மாடும், 3-வது பரிசை பூலாங்கால் சிவஞானபு ரம் மந்திரமூர்த்தி மாடும் பெற்றன.
இந்த பந்தயத்தில் சின்ன மாடு போட்டியில் சக்கரம் இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் வண்டியை ஓட்டி வந்து முதல் பரிசை சித்திரங்குடி ராம மூர்த்தியின் மாடு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தனியங்கூட்டம் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






