search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்-ஊராட்சி தலைவர் காளிமுத்து வலியுறுத்தல்
    X

    ஊராட்சி தலைவர் காளிமுத்து

    நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்-ஊராட்சி தலைவர் காளிமுத்து வலியுறுத்தல்

    • கடுகுசந்தை ஊராட்சியில் நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.
    • காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து. இவர் முன்னாள் அ.தி.மு.க. கடலாடி ஒன்றிய கவுன்சிலராகவும், 25 வருட மாக சத்திரம் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். கடுகு சந்தை ஊராட்சித்தலைவர் காளிமுத்து கூறுகையில்:-

    கடுகு சந்தை ஊராட்சியில் மினி பாரஸ்ட் என ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மெகா பாரஸ்ட் என 5 ஆயிரம் மரக் கன்றுகள் வளர்த்து கடுகு சந்தை ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றி உள் ளேன். இந்த கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட் டம் தேவர்நகர், கடுகுசந்தை பகுதிகளுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவர்நகர் உயர் நிலைப்பள்ளி, தொடக்கப்ப ள்ளியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

    தேவர் நகர் உயர்நிலைப் பள்ளி சமையலறை கட்டிடத்திற்கு ரூ.7.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்தி ரம் கிராமத்தில் இருந்து கூரான்கோட்டை செல்லும் சாலை அருகே புதிய ஊருணி அமைத்து படித்துறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடுகு சந்தை ஊராட்சி சத்திரம், நடுத்தெரு, மேற்கு தெரு, கிழக்குத் தெரு, பகுதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக் கப்பட்டுள்ளது.

    கடுகுசந்தை ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் 5லட்சம்பனை மரங்கள் உள்ளன. ஆகையால் பனை தொழி லாளர்களுக்காக கடுகு சந்தை ஊராட்சி யில் பனங்கற்கண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். சத்திரம் பகுதியில் ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் செல் லும் பக்தர்கள் சத்திரத்தில் உள்ள ராஜாசத்திரம் பகுதியில் தங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக சத்திரத்தில் உள்ள ராஜா ஊரு ணிக்கு படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சத்திரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம், கடுகுசந்தை, முத்துராம லிங்கபுரம், தேவர் நகர், ஆதிதிராவிடர் காலனி, ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்டித் தரவேண்டும். கண்மாய்களை தூர் வாரி, மடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருவிளக்குகள் விஸ்தரிப்பு செய்து தர வேண்டும்.

    நெல் உலர்க்களம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். கடுகுசந்தை ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வா ய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது. அதனை தூர்வாரி கடுகு சந்தை ஊராட்சியில் உள்ள கண் மாய்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×