என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்
    X

    கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்

    • ராமநாதபுரம் அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி பேசினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோவிலாங்குளம், சம்பகுளம், முதல்நாடு, கே.வேப்பங்குளம், குண்டுகுளம், தரைக்குடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பொய்த்தால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோடை உழவு பணி செய்கின்றனர். கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி கூறுகையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் தளர்ந்து சரியாக நிலைப்படுத்தப்படும். மழைநீர் மண்ணின் உள்ளே ஊடுருவதற்கு ஏதுவாக இருக்கும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மக்காத சருகுகள் மக்கி மண்ணில் அங்கக சத்து மேம்படும். கீழ் மண் மேலே புரட்டி விடப்படுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், கிருமிகள் போன்றவை சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும் களைச் செடிகள் களையப்படுவதால் வெயிலில் காய்ந்து பயிரிடும் போது களைகள் குறைவாக இருக்கும். பயிர் பூச்சி,நோய், களை மேலாண்மை செலவுகள் குறைக்கப்படும். இதனால் விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.

    Next Story
    ×