search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் விவசாயிகள்
    X

    நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்தது.

    உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் விவசாயிகள்

    • உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடை உழவு செய்து வருகின்றனர்.

    கோடைகாலத்தில் வயல்களில் உழவு செய்வ தன் மூலம் ஆழமாகவும், வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைமழை பெய்ததால் கோடை உழவு செய்ய வாய்ப்பிருக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் அதிக ரிப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் பருவகாலத்தில் ஒரளவு மழை பெய்தாலும் நெல் உள்பட அனைத்து பயிர்களும் பயன்தரும் என்றார்.மேலும் இதுகுறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் நிலத்தை உழுவதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கிறது. களைக்கொல்லி' பூச்சிக்கொல்லி, எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவ டைகிறது. மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிந்து விடுகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சி களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பூச்சிக் கொல்லி களை பயன்ப டுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. கோடை உழவின் காரண மாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துக்கள் மற்றும் பூஞ்சை நுண்ணு யிரிகள் இறக்கின்றன. கோடை உழவு, பயிர் சுழற்சி ஆகியவை புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×