என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X

    பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    • பாம்பன், ராமேசுவரம் துறைமுகத்தில் அலைகள் பனைமரம் அளவுக்கு எழுந்தன.
    • கடல் சீற்றம் காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பனில் குறைந்த அளவு நாட்டு படகு மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நேற்று இரவு முதல் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பாம்பன், ராமேசுவரம் துறைமுகத்தில் அலைகள் பனைமரம் அளவுக்கு எழுந்தன.

    இன்று காலையும் இதே நிலை நீடித்தது. காற்றின் தீவிரம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக இன்று ராமேசுவரம், பாம்பனில் குறைந்த அளவு நாட்டு படகு மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×