என் மலர்
புதுக்கோட்டை
பாகப்பிரிவினை அசல் ஆவணங்களை வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் சுமதி. இவரது தந்தை பெருமாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுமதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, தந்தை பெருமாள் பெயரில் உள்ள நிலத்தை, பாகப்பிரிவினை செய்தார்.
பின்னர் அதற்கான ஆவணத்தை கடந்த 5-ந்தேதி புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்நிலை சார் பதிவாளர் சுசீலாவிடம், சுமதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் அதற்கான கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆவணங்களை அன்றே சார் பதிவாளர் சுசீலா பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பதிவு செய்த அசல் ஆவணங்களை கடந்த 6-ந்தேதி மதியம் சார் பதிவாளர் சுசீலாவை சந்தித்து சுமதி கேட்டுள்ளார்.
அப்போது, அவரிடம் ரூ.3 கோடிக்கு மேல் சொத்துகளை பாகப்பிரிவினை செய்துள்ளதால், தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் எனவும், இதில் முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை சார் பதிவாளர் அலுவலகம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் எனவும், மீதி பணத்தை விரைவில் கொடுத்துவிட்டு, அசல் ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் சுமதியிடம், சார் பதிவாளர் சுசீலா கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சுமதி, இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமதியிடம் ரசாயனப்பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து, புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுமதி, அங்கு பணியில் இருந்த சுசீலாவிடம், ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் சுசீலாவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 6.15 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி அகிலா ஷாலினி வீட்டில், அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுசீலா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள சுசீலா வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு நகைகள் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர்.

ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை உறவினர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குருந்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கங்காதரன் இறந்து விட்டார். இதையடுத்து தனது மகளுடன் சொந்த ஊரான குருந்திரக்கோட்டை கிராமத்திற்கு வந்த ஜோதிலட்சுமி அங்கு தனது தந்தையுடன் வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் மகள் ராஜேந்திரபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே ஜோதிலட்சுமியின் கணவர் வழி உறவினரான ரமணி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி காலை தாயிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்ற ஜோதிலட்சுமியின் மகள் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததும் எந்தவித தகவலும் இல்லை. பின்னர் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அவரது உறவினர் ஒருவர் வந்து அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கடத்தியதாக புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரமணிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகள் முறை கொண்ட அவர் எதற்காக மாணவியை கடத்தினார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கியில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த கூகனூர்குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுமித்ரா(வயது 20). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி தங்கவேலு விற்கும், சுமித்ராவிற்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மற்றும் புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் 7.09.2018 வெள்ளி கிழமை நடைபெறுவதால் இந்த துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம்,பெருங்களூர், தொண்டைமான்ஊரணி,வாராப்பூர்,அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல்,
மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி,கந்தர்வக்கோட்டை, அக்கசிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பண்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புராண்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளிய லாரி மற்றும் பொக்லின் எந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ஆர்.டி.ஓ பஞ்சவர்ணம் தலைமையில் வருவாய்த்துறையினர் அத்தாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக ஒரு பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அனைவரும் தப்பியோடி விட்டனர். உடனே வருவாய்த்துறையினர் சட்டவிரோதமான மணல் அள்ளிய பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணர் படத்தை அவதூறாக சித்தரித்து முகநூலில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அறந்தாங்கி:
கிருஷ்ணர் பிறந்த நாளான செப்டம்பர் 2-ந்தேதி உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. அன்று கோடிக் கணக்கானவர்கள் முகநூல், வாட்ஸ்அப் மூலம் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணர் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளதை போன்றும், அதன் கீழே சில குளிக்க வந்த பெண்கள் உடைகள் இல்லாமல் நிர்வாணமாக நிற்பதைப் போன்றும், மரக் கிளைகளில் அந்த பெண்களின் புடவைகள் தொங்குவதைப் போன்றும் உள்ள படத்தை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக பதிவு செய்திருந்தார்.
அவரது பதிவை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகரும், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான ராஜேந்திர பிரசாத் என்பவர் ஷேர் செய்து அதன் மேல் பகுதியில் கிருஷ்ணர் அப்படித்தான் வாழ்ந்தார் என்பதைப் போன்ற பதிவையும் அவர் செய்திருந்தார்.
இதைப்பார்த்த புதுக்கோட்டை மாவட்ட யாதவ சமுதாய நலச்சங்கத் தலைவர் சரவணமுத்து என்பவர், தங்களது குலக்கடவுளான கிருஷ்ணர் குறித்து அவதூறாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரவணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, முகநூல் பக்கத்தில் கிருஷ்ணர் குறித்து அவதூறாக பதிவிட்ட சரவணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். தலைமறைவான ராஜேந்திர பிரசாத்தை தேடி வருகின்றனர்.
அறந்தாங்கியில் கிருஷ்ணர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நள்ளிரவில் கணவன் மற்றும் மனைவியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள பரந்தாமன் நகரில் வசித்து வருபவர் காதர் மைதீன் (வயது 54). இவரது மனைவி சம்சாத்பேகம் (50). இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் காதர் மொய்தீன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் முன்புள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு காதர் மொய்தீன் பதறி எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார்.
அதற்குள் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். இதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதர் மைதீனின் கழுத்தில் வைத்து அழுத்தினான். சத்தம் போட்டால் வெட்டி கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டனர். மேலும் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சம்சாத் பேகத்தின் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.
வீட்டில் நகை, பணம் எங்கு உள்ளது எனவும், பீரோ சாவியை தருமாறு கேட்டுள்ளனர். காதர் மைதீன் கூற மறுத்ததால் அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசினர்.
பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். மேலும் காதர் மைதீனின் மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியது.
பின்னர் கணவன்- மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காதர் மைதீனின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் இருவரையும் தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.
இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கீரனூர் டிஎஸ்.பி. பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் நாஞ்சில் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் கொண்ட கும்பல் எனவும், அவர்கள் வீட்டில் இருந்த 8 மோதிரம், கைச்செயின், சம்சாத் பேகம் கழுத்தில் கிடந்த 7½ பவுன் செயின் மற்றும் தோடு என மொத்தம் 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த இருவருக்கும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காதர் மைதீன் கூறுகையில், நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்தது. அவர்கள் டவுசர்கள் மட்டும் அணிந்திருந்தனர். மேலும் முகத்தினை துணியால் மறைத்து கட்டியிருந்தனர். தன்னை தாக்கும்போது, ஒருவர் முகத்தில் இருந்த துணி விலகியது.
மேலும் போலீசார் காட்டிய கொள்ளையர்கள் படங்களில் 2 பேரை அடையாளம் காட்டியதாகவும் கூறினார்.

அறந்தாங்கி அருகே குடும்ப வறுமையால் 9 வயது பேரனை கொன்ற பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா வேலார். இவரது மனைவி சொர்ணவல்லி (வயது 65). மண்பாண்ட தொழில் செய்து வந்த செல்லையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து தற்போது மண்பாண்ட தொழில் நலிவடைந்ததாலும், போதிய வரவேற்பு இன்மையாலும் சொர்ணவல்லி அந்த தொழிலை விட்டு விட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பன்னீர் செல்வம், தங்கராசு என்ற இரண்டு மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் அருகருகே வசித்து வருகிறார்கள். இதில் தங்க ராசுவின் மனைவி நாகேஸ்வரி தம்பதியின் மகன் பாண்டி (9). பரமந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
பாண்டி பிறந்த ஒரு சில ஆண்டுகளில் அவனது தாய் நாகேஸ்வரி நோய்வாப்பட்டு இறந்துவிட்டார். எனவே தங்கராசு, அவரது மகன் பாண்டி, சொர்ணவல்லி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
கூலி வேலைக்கு செல்லும் தங்கராசு, சொர்ணவல்லி ஆகியோரது வருமானத்தின் மூலம் பாண்டியை படிக்க வைத்து குடும்பத்தையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் சரியான வேலை கிடைக்காதததால் குடும்பம் வறுமையில் வாடியது.
இந்த நிலையில் நேற்று சொர்ணவல்லியின் மற்றொரு மகன் பன்னீர் செல்வம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் நூறு நாள் வேலைக்காக சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது சொர்ணவல்லியின் வீடு திறந்து கிடந்தது. அத்துடன் பாண்டியையும் காணவில்லை.
அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டின் அருகே சொர்ணவல்லியும், அவரது பேரன் பாண்டியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
உடனே அவர்களை மீட்ட அந்த பகுதியினர் ஆம்புலன்சு வேன் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். குடும்ப வறுமையால் தற்கொலை முடிவெடுத்த சொர்ணவல்லி, தான் இறந்த பின்னர் தனது பேரனை அக்கறையோடு யாரும் வளர்க்க மாட்டார்கள் என்று கருதி அவனுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ஆவுடையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயையும், மகனையும் இழந்த தங்க ராசு இருவரின் உடல்களையும் பார்த்து கதறித்துடித்தார்.

மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தொழில்நெறி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களிடையே சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து படிப்பு முடித்தவுடன், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள், நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும். இவ்வாறு தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். மேலும் சுய தொழில் மட்டுமல்லாமல் தங்களது குடும்பம் சார்ந்த தொழில்களையும் மேற்கொள்ளலாம்.
தமிழக அரசு சுய தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவினர்களுக்கு மானிய விலையில் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் முகாமின் மூலம் சுய தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை அறிந்து படித்து முடித்தவுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஓய்வுபெற்ற தமிழக அரசு கூடுதல் செயலாளர் டேனியல் பிரேம்நாத், மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி, தொழில் மைய மாவட்ட மேலாளர் இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

கந்தர்வக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வலவம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுபா. உடல்நிலை சரியில்லாத சுபாவை, ரமேஷ் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுபா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தஞ்சாவூர் பழைய அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் கந்தர்வக்கோட்டையில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அடைக்கன் குளம் பகுதியில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் விசாரணை நடத்தி வருகின்றார்.

வாட்ஸ்-அப்பில் தவறாக தகவல்களை பதிவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி நடராஜன் கொடுத்த மனுவில், குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் தொடர்ந்து டாஸ்மாக் கடை நடந்து வருகிறது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடந்தபோது அதிகாரிகள் வந்து பேச்சுவார்தை நடத்தி, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்த பிறகு டாஸ்மாக் கடையை அகற்றி விடுகிறோம் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரைக்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குப்பைகள், தூசிகள் போன்றவை கலந்து வருகின்றன. இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
நச்சாந்துப்டடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலரை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்துடன், இவர்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்றும், இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் என்றும், வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து உள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு ஆடியோவையும் பதிவு செய்து உள்ளார். இதனால் மனமுடைந்த ஒருவர் விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது தவறான தகவல்களை வாட்ஸ்-அப்பில் பதிவு செய்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
கூட்டத்தில் இந்து முன்ணியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை இந்துசமய அற நிலையத்துறைக்கு சொந்தமான திலகர் திடலில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளித்தும், இதுவரை எந்தஒரு நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவில் நிலத்தை தனியாரால் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.