என் மலர்
நீங்கள் தேடியது "lorry and jcb seized"
அறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளிய லாரி மற்றும் பொக்லின் எந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ஆர்.டி.ஓ பஞ்சவர்ணம் தலைமையில் வருவாய்த்துறையினர் அத்தாணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக ஒரு பொக்லின் எந்திரம் மூலம் லாரியில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அனைவரும் தப்பியோடி விட்டனர். உடனே வருவாய்த்துறையினர் சட்டவிரோதமான மணல் அள்ளிய பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.






