என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் அருகே உள்ள பழந்தாமரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் ஆத்மநாதன் (வயது 38). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், சுரேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.
டிராக்டர் டிரைவரான இவர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். குடிப்பழக்கம் கொண்ட ஆத்மநாதன் தினமும், குறிஞ்சிக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் அமர்ந்து இரவு நேரங்களில் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் ஆத்மநாதன் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இன்று காலை மாரியம்மன் கோவில் பகுதியில் சென்றவர்கள் அங்கு ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது அது ஆத்மநாதன் என்பது தெரிந்தது.
உடனடியாக இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கும், ஆவுடையார்கோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆத்ம நாதனின் உடலை மீட்டனர்.
அப்போது அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் இருசக்கர வாகனத்தின் டயர் அவரது உடல் மீது ஏறி, இறங்கியதற்கான தடயங்களும் காணப்பட்டன. எனவே யாரோ மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் எனவும், மது குடிக்கும் தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேதிக்கிறார்கள்.
இதுதொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி வேன் மோதி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், பாலாண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 29). இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 2 வயதில் சகானா என்ற ஒரே பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை சகானா தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேனில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டனர். அந்த நேரத்தில் வேன் முன்பு குழந்தை சகானா நின்றதை கவனிக்காத டிரைவர், திடீரென வேகமாக பள்ளி வேனை ஓட்டினார்.
அப்போது சகானா மீது வேன் மோதி, சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சகானா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அங்கிருந்து வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதைபார்த்து அங்கு ஓடிவந்த குழந்தையின் தாய் இலக்கியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே போலி மதுபானம் தயாரித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அய்யம்பட்டியில் சின்னையா என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உத்தரவின்படி நேற்று ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், தனிப்பிரிவு மகாதேவன் மற்றும் போலீசார் அதிரடியாக சின்னையா வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அவரது வீட்டில் உள்ள ஆட்டு தொழுவத்தில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் மற்றும் 528 மதுபாட்டில்கள் போன்றவை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த ஆலங்குடியை சேர்ந்த இளங்கோவன் மகன் பாலு (வயது 32), புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மணி மகன் ஜெயராஜ் (35). நாகப்பட்டினத்தை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (44) ஆகிய 3 பேரை போலி மதுபானம் தயாரித்ததாக கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலி மதுபானம் தயாரிப்பதற்கான பயன்படுத்தப்படும் பொருட்கள், எரிசாராயம், மதுபாட்டில்கள் மற்றும் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மெர்லின் சகாயராஜ் மற்றும் வீட்டின் உரிமையாளர் சின்னையா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி பகுதியில் நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 63 கடைகளில் இருந்த 3500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சிலர் பயன்படுத்துவதாக அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் நகராட்சி ஆணையர் வினோத் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் முத்துகணேஷ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் சேகர், மேலாளர் சுரேஷ் மேற்பார்வையில் 60 பேர் கொண்ட 6 குழுக்கள் நகர் முழுவதும் உள்ள 3665 கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது 63 கடைகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 3500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த 63 கடைக்காரர்களிடம் ரூ. 84 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
கடையை திறந்து ஆய்வு செய்ய ஒத்துழைக்க மறுத்த பாலமுருகன் என்பவரது கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஆலங்கு அருகே பாம்பு கடித்ததில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணா வல்குடியை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி சுலோசனா (வயது 26). இவர் இதே பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ந்தேதி இரவில் சுலோசனா வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோசனா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பேராவூரணி அருகே மீன் வாங்க வந்த வாலிபர் லாரி மோதி பலியானார்.
மணமேல்குடி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவி கரம்பை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 32). இவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வந்து கொண்டிருந்தார். மீன் மார்க்கெட் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீலகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மார்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெய் சங்கர் (வயது 47). இவர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஜெய்சங்கரிடம் முகவரி கேட்டனர். அவர் இந்த பகுதியில் அந்த முகவரி இல்லை என்று கூறினார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெய்சங்கரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
இது குறித்து ஜெய்சங்கர் விராலிமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து மாற்றுதிறனாளியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
ஆலங்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 4 பேரை போலீசர் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பிளக்ஸ் தொழில் செய்து வந்த முருகானந்தம் மற்றும் ஜபருல்லா ஆகியோர் இடையே ஏற்பட்ட தகராறில் ஜபருல்லா தரப்பினர் முருகானந்தம் மற்றும் அவரது தந்தையை சரமாரி தாக்கினர். காயமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆலங்குடியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கடைகள் சூறையாடப்பட்டன. பள்ளிவாசல் மீது கற்கள்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் ஆலங்குடியில் நேற்று முன்தினம் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படமாட்டோம், இரு சமுதாயத்தினரும் என்றும் உள்ளது போல் ஒற்றுமையாக இருப்போம் என்று எழுதி கொடுத்தனர்.
இந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரஹ்மான், ஹக்கிம், பட்டுக்கோட்டை தாலுகா கொல்லக்காடு பூவாளூர் பகுதியை சேர்ந்த ஹக்கீம் சாய்பு, ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடியில் விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சென்ற ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு, தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும் நேற்று தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
இதை அறிந்த 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் இன்னமும் தங்களுக்கு மடிக்கணினியை வழங்காததை கண்டித்து உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கறம்பக்குடி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து கறம்பக்குடி சீனீகடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் 4 பகுதிகளிலும் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் தாசில்தாரை வரவழைத்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி மாணவர்களை அழைத்து சென்றனர். ஆனால் அங்கு தாசில்தார் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பின்பே தற்போதைய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தற்போதைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்படும் எனவும், முதன்மை கல்வி அதிகாரியிடம் இதுகுறித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

புதுக்கோட்டை அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் காரைக்குடி நோக்கி சென்றது. இந்த பஸ் புதுக்கோட்டை அருகே சென்றபோது அதே பகுதி அடப்பன் வயலை சேர்ந்த முகம்மது மீரான் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாரதவிதமாக பஸ்சின் மீது மோதியது. இதில் முகம்மது மீரான் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகம்மது மீரான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் காரைக்குடி நோக்கி சென்றது. இந்தபஸ் புதுக்கோட்டை அருகே சென்ற போது அதே பகுதி அடப்பன் வயலை சேர்ந்த முகம்மது மீரான் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாரதவிதமாக பஸ்சின் மீது மோதியது. இதில் முகம்மது மீரான் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகம்மது மீரான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமயம் அருகே மொபட் மற்றும் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 55). இவர் நேற்று மதியம் சொந்த வேலை காரணமாக நமண சமுத்திரம் -பொன்னமராவதி சாலையில் குழிபிறையை நோக்கி ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலவன் (75) பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.
திருமயம் அருகே உள்ள பொன்னனூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த மொபட் மீது கார் மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அடைக்கலவன், முத்துக்கருப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் இறந்த அடைக்கலவன், முத்துக்கருப்பன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.