என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராலிமலை அருகே மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்18 July 2019 2:31 PM GMT (Updated: 18 July 2019 2:31 PM GMT)
விராலிமலை அருகே கடைக்கு நடந்து சென்ற மாற்றுதிறனாளியை தாக்கி 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மார்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெய் சங்கர் (வயது 47). இவர் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஜெய்சங்கரிடம் முகவரி கேட்டனர். அவர் இந்த பகுதியில் அந்த முகவரி இல்லை என்று கூறினார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜெய்சங்கரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
இது குறித்து ஜெய்சங்கர் விராலிமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து மாற்றுதிறனாளியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×