என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    புதுக்கோட்டை அருகே பஸ் மோதி வாலிபர் பலி

    புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் காரைக்குடி நோக்கி சென்றது. இந்தபஸ் புதுக்கோட்டை அருகே சென்ற போது அதே பகுதி அடப்பன் வயலை சேர்ந்த முகம்மது மீரான் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாரதவிதமாக பஸ்சின் மீது மோதியது. இதில் முகம்மது மீரான் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகம்மது மீரான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×