என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோ ட்டை, பெரிய கோட்டை ஊராட்சி, கொத்தகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 30). திருமணமாகாத இவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூரிலிருந்து கொத்தக பட்டிக்கு வந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கல்லுக்குளத்திற்கு சென்று, கரையில் துணிகளை வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் முடியாததால், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கிய சாமி தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி பாலசுப்பிரமணியம் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, பெரிய கோட்டை ஊராட்சி, கொத்தகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 30). திருமணமாகாத இவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூரிலிருந்து கொத்தகபட்டிக்கு வந்தார். நண்பர்கள் மற்றும்உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கல்லுக்குளத்திற்கு சென்று, கரையில் துணிகளை வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் முடியாததால், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கிய சாமி தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி பாலசுப்பிரமணியத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால், நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில், கந்தர்வக்கோட்டை போலீசார், கிராம நிர்வாக அதிகாரி அன்பரசன், தாசில்தார் புவியரசன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் ஈடுபட்டு வருகின்றனர். குளிக்க சென்ற இடத்தில் வாலிபர் இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலை ரூ.300 கோடி செலவில் மேம்படுத்த ஒருங்கிணைந்த பெருந்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரத்தை தரிசிக்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், எச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அன்னதானக்கூடம், கீழ் தளம், முதல் தளம் என 1,000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவுக்கு திட்டங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி பெட்டி, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுப்பது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கோவிலை சுற்றி உள்ள பனைப்பொருட்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவிட அதிகளவில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி செய்து கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்ய என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்தும், அங்கபிரதட்சனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கலாமா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மறுநாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். இதனை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முக்கிய பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
இதே போல் இந்த ஆண்டு நேற்று தீவாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், இன்று விராச்சிலையில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாடு திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் பரளி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (52) என்பவர் வயிற்றில், மாடு முட்டி கிழித்தது. குடல் சரிந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பையா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இசுகு பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வல்லத்திராகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இசுகுபட்டி கோவில் வாசல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆலங்குடி கோவில்பட்டியை சேர்ந்த பிரவீன் மற்றும் இசுகு பட்டியை சேர்ந்த பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொட்டிய மழையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையினை கொண்டாடினார்கள்.
தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் நகரில் குப்பைகள் குவியும். இதனை உடனே அகற்றுவதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி செய்து இருந்தார்.
மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பட்டாசு குப்பைகளை உடனே அகற்றுவதற்கான விரிவான ஏற்பாடுகள் மண்டல அதிகாரிகள் தலைமையில் நடந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை தூறல் இருந்த போதிலும் குப்பை அகற்றும் பணிகளில் தொய்வில்லாமல் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை நகர் முழுவதும் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் 1,000 ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு தெருக்களிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசு குப்பைகள் இரவோடு, இரவாக அகற்றப்பட்டன.
நள்ளிரவு வரை 48 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.
மழை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் உருவாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் 1,000 பேர் இந்த பணியில் ஈடுபட்டதால் குப்பைகள் தேங்காமல் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
இன்றும் சாலையில் உள்ள குப்பைகளை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமாக வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் ஊழியர்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அதன் அளவு இன்று பிற்பகல் தெரிய வரும்.
கட்டிடக்கழிவுகளும் பெருமளவு அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் தேங்காத வகையில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் உடனடியாக மூடப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக 13.43 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை 9-வது மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.







