என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறைகளான முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக பா.ம.க.வினர் மீது திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    திருவையாறு:

    திருவையாறு பேருந்து நிலையத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி வன்னியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உள்பட 50 பேர் மீது கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறைகளான முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைகளிலும், அணைக்கட்டிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் தடுப்புகளை தொட்டப்படி தண்ணீர் இருப்பதை காண முடிகிறது. இதனால், கிணற்று பாசனங்களை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை லேசாக மழை தூறியது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பல இடங்களில் இதே நிலைமை தான் இருந்தது.
    டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டி உள்ளது. இந்த பிரச்சினை பல மாதங்களாக டெல்லியில் நீடித்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளும் ஒரு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் புகை பரவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    “டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதை அவசர கால நிலை என கூறலாம். அனைத்து விவகாரங்களுக்கும் விவசாயிகளை குறைகூறுவது தற்போது வழக்கமாகிவிட்டது. கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது என்பதை கவனித்தீர்களா? பொதுமக்கள் வீடுகளுக்குள் மாஸ்க் அணியும் அளவிற்கு மாசுபாடு மிகவும் மோசமாக உள்ளது. எனவே  காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    தொடர் மழையினால் 988 எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பரம்பூரில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. வயல்களில் தற்போது நடவு செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் மூழ்கின. மாவட்டத்தில் மொத்தம் 988 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    மக்காச்சோளப்பயிர்கள் 252 எக்டேர் பரப்பளவில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், மழை பெய்யாவிட்டால் தண்ணீர் வடிந்துவிடும் எனவும் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாராப்பூர் பகுதியில் குளத்தின் கரையில் ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் மணல்மூட்டைகள் கொண்டு பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே காரசூரான்பட்டியிலிருந்து பரம்பூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேரனூர் கண்மாய்க்கு சென்ற மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்தப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேரனூர் கண்மாய்க்கு செல்லும் நீர் தடைப்படாமல் இருக்கவும் தண்ணீர் வீணாவதை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சாலையின் குறுக்கே உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டதால் காரசூரான்பட்டி, வண்ணாரப்பட்டி, புதுப்பட்டி, காப்புக்குடி, கார்ணாப்பட்டி, அச்சுக்காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, காணியாப்பட்டி, கைவேலிப்பட்டி, மாங்காடு, கவிணாரிப்பட்டி, உப்பிலியவட்டி, புத்தகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பரம்பூருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தற்போது இந்த பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 9 கிலோமீட்டர் வரை சுற்றி பரம்பூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், பாலம் உடைந்து 4 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் கிராம மக்கள் பாலம் கட்டி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பெய்த மழைக்கு அந்தப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பாலத்தை சீரமைத்தால் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விராலிமலை அருகே மேப்பூதகுடி கிராமத்தில் தொட்டியம்மாள் என்பவரது ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவரானது இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கீரமங்கலம் அடுத்துள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் கருப்பாயி என்பவரின் ஓட்டுவீட்டின் ஒரு பக்க சுவர் வெளிப்பக்கமாக சாய்ந்தது. எனவே சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அன்னவாசல் பகுதிகளில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உணவு, உடைகளை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

    பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள குழவாய்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதேபோல் பொன்மணி என்பவரின் ஓட்டு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. இதனை காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, இடையாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன் மற்றும் கிராம உதவியாளர் மலர்கொடி ஆய்வு மேற்கொண்டனர்.
    தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 591 ஆகும். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 277 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
    அன்னவாசல் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக காரசூரான்பட்டி-பரம்பூர் சாலையில் பாலம் உடைந்தது. அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல நேற்றும் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டையை அடுத்த ஒட்டக்குளத்தில் நீர் நிரம்பியதை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை கூடல் நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், கவிநாடு பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பார்வையிட்டார். அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சேரனூர் கண்மாயில் இருந்து பெருக்கெடுத்த மழை வெள்ளத்தின் காரணமாக பரம்பூரில் இருந்து காரசூரான்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்து ஆற்றங்கரையை உடைத்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம் ஊராட்சி அண்ணாப்பட்டியில் மருதாகுளம் வாரியை சிலர் அடைத்து வைத்துக் கொண்டு திறக்க முடியாது என்று கூறுவதால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோன்று இலுப்பூர் நவம்பட்டி வல்லிகுளம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அன்னவாசல் பகுதியில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. புதுக்குளம், பெரியகுளம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. அன்னவாசல் பகுதிகளில் பல்வேறு குளங்களை சிலர் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு மீன் வளர்ப்பதாகவும், இதனால் மீன் வெளியே சென்றுவிடாமல் இருக்க பாலங்களில் வலை கொண்டு அடைத்துள்ளதால் அந்த வலையில் பல்வேறு கழிவுகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் நரிகுறவர் காலனி குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கறம்பக்குடி நகர தி.மு.க.வின் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    பெருங்களூர் கிராமத்திலிருந்து மங்களத்துப்பட்டி, மணவாத்திப்பட்டி, லெட்சுமாபுரம், பன்னிரண்டாம்பட்டி, குட்டகுளவாய்பட்டி, கூத்தாச்சிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் காட்டுப்பட்டி அருகே தரைப்பாலம் உள்ளது. பலத்த மழையின் காரணமாக இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக கறம்பக்காடு இனாம் கிராமத்தில் தாளங்குளம் கரையோரம் பலர் குடிசை அமைத்து வசிக்கின்றனர். நேற்று பெய்த தொடர் மழையால் தாளங்குளம் ஏரியில் தண்ணீர் நிரம்புவதால் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்பனைக்காடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைத்தண்ணீர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கல்லணை கால்வாயில் திருப்பி விடப்பட்டது.

    இடைவிடாது பெய்த மழையால் கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டு கீரனூர் பெரிய குளத்திற்கு வந்து சேர்ந்தது. ஆனால், தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைதொடர்ந்து பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தண்ணீரை வெளியேற செய்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு கீரனூர் பெரியகுளம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடியிலிருந்து கீரமங்கலம் வழியாக பேராவூரணி, அறந்தாங்கி, மேற்பனைக்காடு ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, நகரம், திருநாளூர் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் கொத்தமங்கலம் வந்து பஸ் ஏறி சென்று வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தொடர்மழை காரணமாக தனியார் பஸ்சும் நிறுத்தப்பட்டதால் பல கிராம மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விராலிமலை ஒன்றியம் பேராம்பூர் பெரியகுளத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மதகுகளை மாவட்ட வடகிழக்கு பருவமழை பாதிப்பு மற்றும் மீட்புக்கான கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். மேலும் பேராம்பூர் அணைக்கட்டு மற்றும் மதகுகள் புதிதாக கட்டுவதற்கு புதிய ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குளத்தை சுத்தப்படுத்தி படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, கீமனக்கண்மாய் மழையின் காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையின் ஒரு பகுதி உடையும் தருவாயில் உள்ளது. இதனை, ஊராட்சி மன்ற தலைவர் ராமையா பார்வையிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

    பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் நீர்நிலைகளில உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு கரையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இதனை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், சதாசிவம் மற்றும் தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்டோர் வேகுப்பட்டி ஊராட்சி மற்றும் மேலைச்சிவபுரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பார்வையிட்டனர். இதேபோல அரிமளம் ஒன்றியத்திலும் குளம், கண்மாய் கரைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    திருமயம் வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களின் சேத விவரங்களை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், விராச்சிலை மற்றும் அரசன்தம்பட்டி, லெம்பலகுடி ஆகிய வருவாய் கிராமங்களில் பார்வையிட்டார். அப்போது அவர், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து ஏக்கருக்கு ரூ.465 பிரீமிய தொகை செலுத்தி இயற்கை இடர்பாடுகளிலிருந்து வருவாய் இழப்பினை தவிர்க்கலாம் என கேட்டுக்கொண்டார். அப்போது புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா, வேளாண்மை அலுவலர் புனிதவதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
    நீரிழிவை விரட்டும் நாற்காலி யோகா குறித்து யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
    இன்று சமுதாயத்தில் நிறைய நபர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய குறைபாடு சுகர் (நீரிழிவு) என்ற நோய்.  ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிறைய நபர்களுக்கு சுகர் உள்ளது.  அதற்காக பலவித மருந்துகள் எடுத்து உடல், மன சோர்வுடன் வாழ்கின்றனர்.  இதற்கு நிரந்தர தீர்வு நம்மிடமே உள்ளது.  அது தான் யோகக்கலையாகும்.  இந்த யோகக்கலை மூலம் சரியான சிகிச்சையாக அதுவும் அனைத்து வயதினரும் செய்யும் வகையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தே சுகர் நீங்கி சுகமாக வாழும் யோகச் சிகிச்சையை காண்போம்.

    சுகரும் - மனமும்

    நமது மனதில் எழும் எண்ணங்கள், உணர்வுகளுக்கு ஏற்ப நமது உடலில் சுரப்பிகள் சுரக்கும் தன்மைகள் மாறுபடுகின்றது.  மனதில் கவலை, டென்ஷன், கோபம், பயம், எரிச்சல் இருந்தால் கணையம் ஒழுங்காக சுரக்காது.  கணையத்தில் உள்ள இரு செல்கள் ஆல்பா/ பீட்டா செல், இதில் பீட்டா செல் இன்சுலினை சுரக்கின்றது.  நாம் முதலில் மனதளவில் நல்ல நேர்முகமான எண்ணத்துடன் வாழ வேண்டும்.  அதற்குத்தான் முத்திரைகள் பயன்படுகின்றது.  

    முத்திரை என்பது கை விரல் நுனிகள் மூலம் மனித உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உள் உறுப்புக்களை சிறப்பாக இயங்கச் செய்யும் கலையாகும்.  எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிமையான அருமையான கலையாகும்.  நம்பிக்கை மட்டும் வேண்டும்.  உங்களை நம்புங்கள், நமது உயிர் ஆற்றலை நம்புங்கள். உடலையும், மனதையும் செம்மையாக்கும் யோகா பயிற்சி மூலம் நிச்சயமாக சுகர் வராமல் வளமாக வாழலாம்.  இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய பயிற்சிகளை காண்போம்.
    நேரம் காலை 4  மணி முதல் 7 மணிக்குள்ளும், மதியம் 12  முதல் 2  மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 7  மணிக்குள்ளும் சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும்,

    சின் முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முது கெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து விநாடிகள் கவனிக்கவும்.  பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை இணைக்கவும்.  மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். 

    சின் முத்திரை

    இரு கைகளிலும் பயிற்சி செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும் .  அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    இம் முத்திரை மனதில் உள்ள பயம், கவலை எரிச்சல், மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு புத்துணர்வு  கொடுக்கும் முத்திரையாகும். நேர்முகமான எண்ணங்களை கொடுக்க வல்லது.  எதிர் மறை எண்ணங்களை அழிக்க வல்லது.  இதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், மூச்சோட்டம் சமமாக இயங்கும்.  நல்ல பிராண சக்தி உடல் முழுக்க கிடைக்கும்.  எல்லா நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கும்.

    வருண முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.  பின் சுண்டு விரல், பெரு விரல் நுனியை இணைக் கவும்.  மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.  இரு கைகளிலும் செய்யவும். 

    வருண முத்திரை

    இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.  காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
    இந்த முத்திரை மூலம் கணையம் நன்றாக இயங்கும்.  அதில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.  சரியான அளவு இன்சுலின் சுரக்கும்.

    சுமண முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  கண் களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். 

    சுமண முத்திரை

    படத்தில் உள்ளது போல் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள்  முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.  காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை  நீக்க வல்லது.  நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.  சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது.  செரிமானம் நன்றாக இயங்கும்.  தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது.  உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது.  சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

    அபான வாயு முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முது கெலும்பு நேராக இருக்கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் நடுவில் கட்டை விரலை வைக் கவும்.  ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும்.  சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    நாற்காலியில் அமர்ந்து பச்சிமோஸ்தாசனம்

    அபான வாயு முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  எதிரில் மூன்றடி தூரத்தில் மற்றொரு நாற்காலியை படத்தில் உள்ளது போல் வைக்கவும்.  இரு கால்களையும் மெதுவாக எதிரில் உள்ள நாற் காலியில் நீட்டவும்.  இப்பொழுது கைகளை தலைக்குமேல் உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டு கால் பெரு விரலை கைகளால் தொடவும்  தலையை மெதுவாக முட்டை நோக்கி சாய்க்கவும்.  பத்து விநாடிகள் முதல் இருபது விநாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும்.  பின் மெதுவாக கைகளை தலையை உயர்த்தி சாதாரண நிலைக்கு வரவும்.  இதே போல் ஐந்து முறைகள் பொறுமையாக செய்ய வேண்டும்.

    இந்த ஆசனம் நாற்காலியின் உதவியால் அழகாக நாம் செய்துவிட முடியும்.  இதன் பலன்கள் அளவிடற்கரியது.  கணையம் மிக நன்றாக இயங்கும்.  சிறுநீரகம், சிறுநீரகப் பை நன்கு சக்தி பெற்று இயங்கும்.  அடிக்கடி சிறுநீர் கழித்தல் சரியாகும்.  ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும்.  வயிற்று உள் உறுப்புக்கள் அனைத்தும் பிராண சக்தி பெற்று மிகச் சிறப்பாக இயங்கும்.
    பொறுமையாக, நிதானமாக இந்த ஆசனத்தை இரு  நாற்காலியின் உதவியால் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும்.

    மணிபூரகச் சக்கரா தியானம்

    ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கைகளை சின் முத்திரையில் வைக்கவும்.  இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.  நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைப்பதாக எண்ணுங்கள்.  இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து கவனிக்கவும்.  ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்கள் தியானிக்கவும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    மணிபூரகச் சக்கர தியானம்

    இந்த தியானம் வயிற்று உள் பகுதியில் உள்ள கணையத்தை மிக நன்றாக இயங்கச் செய்கின்றது.  அதில் உள்ள குறைபாட்டை நீக்கி நல்ல பிராண சக்தியை தருகின்றது.  மனித உடலில் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியை நன்கு இயங்கச் செய்யும்.  அதில் மணிபூரகச் சக்கரம் கணையத்தை நன்கு இயங்கச் செய்கின்றது.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை ஒரு முத்திரை சிகிச்சையாக எடுத்துக் கொள்ளுங்கள்  நாற்காலியில் அமர்ந்து தினமும் பயிலுங்கள்.  ஒரு மண்டலம் 48 நாட்களில் மிக நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். தினமும் காலை 4  மணி முதல் 5  மணிக்குள் எழுந்து விடுங்கள்.  காலை கடனை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு மேற்குறிய பயிற்சிகளை நாற்காலியில் அமர்ந்து பயிலுங்கள்.

    சாப்பிடும்போது டி.வி,தொலைபேசி  உபயோகிக்க வேண்டாம். புத்தகம் படிக்க வேண்டாம்.  நல்ல சாத்வீகமான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள்.

    முருங்கை கீரையை உணவில் அடிக்கடி எடுக்கவும்.  பாகற்காய் உணவில் எடுக்கவும்.  நாவல் பழக்கொட்டை பொடி வாரம் இரு நாட்கள் உணவில் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.  மைதாவினாலான உணவை தவிர்க்கவும். மனித உடல் ஐந்து அடுக்கினாலானது.  முதல் அடுக்கு அன்னமயகோசம், இரண்டாவது அடுக்கு பிராணமய கோசம், மூன்றாவது அடுக்கு மனோன்மயகோசம், நான்காவது அடுக்கு விஞ்ஞானமய கோசம், ஐந்தாவது அடுக்கு ஆனந்தமயகோசம். (ஆன்ம உயிர்).

    நாம் செய்யும் யோகா, முத்திரை, தியானப் பயிற்சிகள் நமது ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆன்ம சக்தியை மற்ற நான்கு அடுக்குகளிலும் பரவ செய்து, நான்கு வித உடல்களையும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.  உங்களை நம்புங்கள், உங்களுக்குள் உள்ள உயிர் ஆற்றலை நம்புங்கள்.  நிச்சயமாக மேற்கூறிய யோகச் சிகிச்சை மூலம் சுகர் நீங்கி சுகமாக வாழலாம்.
    வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவூர்:

    குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள ராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வனஜா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தங்களது இரு மகன்களுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வனஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த வனஜா மர்ம நபரிடமிருந்து தங்க செயினை இறுக பிடித்து சத்தம் போட்டார். சதாசிவம் மற்றும் அவர்களது மகன்கள் எழுந்து மின்விளக்கை போடுவதற்குள் மர்மநபர் செயினை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சதாசிவம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சதாசிவம் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே உள்ள போலத்தம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). விவசாயி. இந்நிலையில் சென்னம்பட்டி கிராமத்திற்கு சென்று மகளை பார்த்துவிட்டு காரிமங்கலம் நோக்கி மோட்டார் பைக்கில் வந்து கொண்டு இருந்தார். அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அவர் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் வடிவேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராசு (வயது 61). இவர் நேற்று இரவு பரம்பூர்-புதுக்கோட்டை சாலையில் கடம்பராயன்பட்டி விளக்கு அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராசு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, குட்டப்பட்டி பகுதிகளில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டப்பட்டி நால்ரோடு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், குளித்தலை எழுநூற்றுமங்கலம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 35), சந்திரசேகர் (40) என்பதும், அவர்கள் 2 பேரும் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.
    கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் கறம்பக்குடியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்த்திகா ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுப்பிரமணியன் சம்பவத்தன்று கறம்பக்குடியில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ராங்கியன் விடுதிக்குச் சென்றார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் மட்டும் ஆட்டோவை ஓட்டி கொண்டு கறம்பக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பிள்ளகுறிச்சி சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை, அப்பகுதி மக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×