என் மலர்
புதுக்கோட்டை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி எதிர்ப்பு மருந்தாக இருந்து வரும் நிலையில், பைசர் நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்து, அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பண மதிப்பில் ஒரு கோடி மாத்திரைகளை 39,378.05 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அப்படி பார்த்தால் ஒரு மாத்திரையின் விலை 39 ஆயிரத்து 378 ரூபாய் ஆகும்.
கொட்டித் தீர்த்த கனமழையால் பெருங்குடி பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
அரிமளம்:
புதுக்கோட்டை மற்றும் மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்தநிலையில் அரிமளம் ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் பெருங்குடி கண்மாய் உள்ளது. இதன்மூலம் பெருங்குடி, வடக்குப்பட்டி, கூத்தம்பட்டி, சேப்பிளான்பட்டி, பாப்பம்பட்டி, விலாங்காட்டான்பட்டி, ஓட்டுப்பாலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பெருங்குடி கண்மாய் கலிங்கி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தேங்கிய கண்மாய் நீர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் புகுந்து நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.
இதனால் சுமார் 70 முதல் 100 ஏக்கர் வரை விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து நடவு செய்து இருந்தனர். நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியதால் பயிர்கள் வளர்ந்து இருந்தன. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆகவே, பெருங்குடி கண்மாய் கலிங்கி மற்றும் வரத்து வாரிகளை சீரமைத்து நீர் செல்லும் வழித்தடங்களின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் குளத்தில் மீன்களை குத்தகைக்கு விடும் பணியை மட்டுமே செய்கின்றனர். ஆனால் குளத்தின் மடை, வரத்து வாய்க்கால் கலிங்கி ஆகியவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேடு பகுதி பாணிக்காடு கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டதை ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள்அயோத்திராஜா பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பொன்-புதுப்பட்டியில் நாகப்ப செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே மலையான் ஊரணி உள்ளது. மழையின் காரணமாக ஊரணியின் சுற்று சுவரின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. அதன் வழியாக பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையின் காரணமாக ஆலங்குடி பகுதியில் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. மாஞ்சக்குளம், கோவிலூர் பெரியகுளம், ஆலங்குடி பெரியகுளம், கருமணிக்குளம், சூரன்விடுதி ஆற்றுக்குளம் ஆகியவை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில், காலம் கடந்து பெய்த மழையால் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. இனிமேல் நாற்றுப் பாவினால் பயிர் வளர ஒரு மாதம் ஆகும். அதன்பிறகு நடவு வேலை ஆரம்பிக்கும். தண்ணீரை சேமிக்காவிட்டால் கதிர் விடும் சமயத்தில் தண்ணீர் இருக்காது என்றார்.
பொன்னமராவதி புதுப்பட்டி நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள மலையா ஊரணியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள படித்துறை பகுதியில் மண் சரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்சரிவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் நிரம்பினாலும் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்து வாரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனாலும் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிக் கொடுக்காததால் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிறையவில்லை. இந்த நிலையில் தான் கொத்தமங்கலம் அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் அன்னதானக்காவிரி கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
வடகாடு பகுதியில் நேற்று முன்தினம் கன மழை பெய்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கன மழை பெய்தது. இதனால் கடைத்தெரு மற்றும் வீடு பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இப்பகுதியில் இதேபோல் கனமழை பெய்தால் இன்னும் நிரம்பாத நிலையில் இருக்கும் குளங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
‘சுயசார்பு இந்தியா’ மூலம் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போர் தளவாடங்களை ராணுவத் தளபதிகளிடம் பிரதமர் மோடி நாளைமறுதினம் முறைப்படி வழங்குகிறார்.
பிரதமர் மோடி நாளைமறுதினம் (நவம்பர் 19-ந்தேதி) உத்தர பிரதேசம் செல்கிறார். ஜான்சியில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அப்போது சுயசார்பு இந்தியா மூலம் உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் தயாரித்துள்ள போர் தளவாடங்களை அந்தந்த பிரிவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள இலகு ரக போர் விமானங்கள், டிரோன்களை விமானப்படைக்கு முறைப்படை வழங்குகிறார். அதேபோல் போர் கப்பலுக்காக பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ள மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட்-ஐ கடற்படை தளபதியிடம் வழங்குகிறார்.
ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆவுடையார் கோவிலில் இருந்து இந்த வழியாக செல்லும் மினி பஸ் குளத்து குடியிருப்பு, பெருநாவலூர், கறம்பக்குடி, காடங்குடி, திருவாகுடி, குருங்கலூர் வரை சென்று திரும்புகிறது. இந்த பஸ்சில்தான் பெருநாவலூர் மற்றும் ஆவுடையார் கோவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 முறை ஆவுடையார்கோவிலில் இருந்து குருங்கலூர் வரை இந்த மினி பஸ் சென்று வருகிறது. இதனால், மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டம் நடத்திய நிலையில் உயர்கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளில் இறுதியாண்டின் கடைசி தேர்வு மட்டும் நடத்தப்பட்டது.
2-வது அலை காரணமாக ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 1-ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்புக்கான பள்ளிகளில் இருந்து அனைத்து வகுப்புக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம், நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. தமிழகத்தின் மற்ற அனைத்து கல்லூரிகளிலும் இதே முறையில்தான் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் ஆன்-லைன் முறையில் செமஸ்டர் தேர்வை நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என தமிழக உயர்கல்விதுறை செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் என்பவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி மாதவனுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகனின் திருமணத்தன்று சீர்வரிசைகளை வீட்டில் வைத்துவிட்டு வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அரிமளம் அருகே மது விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் அருகே உள்ள ராயவரம் பகுதியில் அரிமளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற பீட்டர் (வயது 45) பிடிபட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறந்தாங்கி அருகே கடையின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியை சேர்ந்தவர் ரகு (வயது 37). இவர் வல்லவாரி கிழக்குகடை தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின் பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கண்டியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லாயி (வயது 80). இவர் அவரது உறவினரான பழனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அம்புக்கோவில் சாலையில் சென்ற போது நாய் குறுக்கே செல்லவே, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி செல்லாயி, பழனிசாமி ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் செல்லாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மகேந்திரன் கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதேபோல் மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றனர்.
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஏ.ஒய்.ஏ. நாடார் ரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 45) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதேபோல் தஞ்சை தெற்கு போலீசார் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமாநகரில் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வண்டிக்கார தெருவை சேர்ந்த சரவணன்(33) என்பதும், லாட்டரி சீட்டுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.200 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






