என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொங்கியது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்பின், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தீர்மானத்தின் முழு விவரம்:

    உயிர்தியாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி

    ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக நின்று போராடி அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் அறிவிப்பிற்குப் பின்னணியாக இருக்கும் உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்தக் கூட்டம் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்துகிறது.

    குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்க

    குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து எதிர்த்து- மாநிலத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

    அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு துவக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது தி.மு.க. இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றது தி.மு.க.. தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தியது தி.மு.க.

    வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே - அந்தச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி - 23.9.2020 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு - தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் அறிவித்து - நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் பங்கேற்று முழங்கினார் மு.க. ஸ்டாலின்.

    அனைத்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு - இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் - 5.12.2020 அன்று கருப்புக் கொடி ஏந்தி ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் 30.11.2020 அன்று கூட்டறிக்கை வெளியிட்டு - மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், 8.12.2020 அன்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அறிவித்து - அவ்வாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அகில இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து “மூன்று வேளாண் சட்டங்களையும் அரசை திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தது. 18.12.2020 அன்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் இருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.

    பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட நிலையில் - தமிழ்நாட்டிலும் அப்படியொரு தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தி 1.1.2021 அன்று, அன்றைய தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஸ்டாலின். அனைத்து கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி - அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அச்சட்டங்களைத் திரும்ப பெறவில்லை என்பதால் - தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

    கலந்து கொண்ட எம்.பி.க்கள்

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சராக - ஸ்டாலினே தீர்மானத்தை முன்மொழிந்து “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக” என வலியுறுத்தும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதை இந்தக் கூட்டம் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

    வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டு கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜாகத்தையும் - கண் மூடித்தனமான அடக்குமுறைகளையும் - முள் வேலிகளையும் - தைரியமாக எதிர்த்து நின்று - இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு தி.மு.க. தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்கட்சியாக இருந்த போதும் - ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது.

    இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் அவர்களுக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி - இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

    அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று,  நாடாளுமன்றத்தின் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை - சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    புதுக்கோட்டையில் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற சம்பவத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    புதுக்கோட்டை: 

    திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் டிஐஜி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக, 2 டிஎஸ்பிக்கல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.

    டி20 உலக கோப்பை தொடர் நடந்த சில தினங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணித்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் 164 ரன்களும், இரண்டாவது போட்டியில் 153 ரன்களும் சேர்த்தது. பந்து வீச்சிலும் அந்த அணி வீரர்கள் எந்த நேரத்திலும் சவால் அளிக்கும் வகையில் துல்லியமாக வீசுகின்றனர்.

    இன்றைய ஆட்டத்தில் தோற்காமல் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் போராடுவார்கள். 

    இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர்.

    எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

    வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி, ராசிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60). இவரது மகன் சதீஷ். தந்தை-மகன் இருவரும் அவர்களது வீட்டின் அருகிலேயே பேப்பர் கப் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகின்றனர். அதில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 20 பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் மனைவிக்கு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதை பார்ப்பதற்காக சதீஷ், சக்திவேல் ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்று இருந்தனர். பின்னர் நேற்று மாலை சக்திவேல் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளின் அடிப்படையில் வெளி நபர்கள் யாரேனும் வந்து வீட்டிற்குள் இருந்த நகையை திருடிச் சென்றனரா? அல்லது சக்திவேல் நடத்திவரும் பேப்பர் கப் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் யாரேனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சக்கரவர்த்தி நகரை சேர்ந்தவர் இம்ரான் (வயது30). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து இம்ரானின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உள் கர்நாடகா மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.

    டெல்டா மாவட்டங்கள் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை 21-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் அதனையொட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

    மழை

    22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும். 23, 24 தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு மழை அதிகரிக்க கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம், ஜமுனா மரத்தூர் தலா 7 செ.மீட்டர் பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417 பேராக உள்ளது.
    மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார்.
    மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

    கார்த்தி

    நடிகர் கார்த்தி, "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ஆலங்குடி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி போலீசார் அரசடிபட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாண்டான்விடுதியை சேர்ந்த பாக்கிய நாதன் (வயது 37) மற்றும் குழந்தை விநாயகர் கோட்டையை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகியோர் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயப்பாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, காரனுர், புதுமோகூர், பொன்பரப்பட்டு, குடிகாடு, மோ.வன்னஞ்சூர், க.மாமனந்தல், க.அலம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.



    அறந்தாங்கி அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிக்கெட் பரிசோதகர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள குன்னக்குரும்பியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். நாயக்கர்பட்டி என்ற இடத்தில் சென்ற போது சாலையின் நடுவே நின்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. 

    இதில் மூர்த்தி தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூர்த்திக்கு, அமுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    ×