என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை எஸ்ஐ கொலை"

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில்  மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகள் திருடும் கும்பலை பிடிக்க முயன்றபோது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தாருக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதா மற்றும் மகன் குகன்பிரசாத்திடம் வழங்கினார்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சின்போது, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்பை தடுக்க மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில் 100 சதவீதம் ஆதாரம் இருப்பதால், சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ம் தேதி அன்று ஆடு திருடும் கும்பலை பிடிக்க முயன்றபோது, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதைதொடரந்து, தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், பூமிநாதனின் மனைவி மற்றும் மகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன்

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

    வீர மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு காவல்துறை வீர  வணக்கம் செலுத்துகிறது. அவரது இழப்பு பெரிய இழப்பாகும்.

    பூமிநாதன் ஏற்கனவே முதல்வரிடம் பதக்கம் வாங்கியவர். தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்றவர். சிறந்த வீரர். கடமை உணர்வுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் வேலைப்பார்த்தவர். ஆடு திருடும் கும்பல் தானே என்று அவர் சாதாரணமாக விட்டுவிடவில்லை. 15 கி.மீ., தூரம் துரத்திச் சென்று மூன்று பேரையும் மடக்கி பிடித்து, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
     
    மேலும், குற்றவாளிகளின் பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் செய்த குற்றத்தை தெரிவித்து அறிவுரையும் வழங்கி உள்ளார்.

    சட்ட விதிப்படி அவர் நடந்து கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு பூமிநாதனை கொலை செய்துள்ளனர்.

    காவல்துறை மீதான தாக்குதல் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். அதனால், ரோந்துப் பணியின்போதோ அல்லது தனியாக செல்லும்போதோ 6 தோட்டாக்களுடன் துப்பாக்கியை எடுத்துச்செல்ல போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். சட்டப்படி போலீசார் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்கக்கூடாது.

    வீடியோ உள்பட 100 சதவீத ஆதாரம் இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

    திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். 

    இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் மணிகண்டன் உள்பட 3 பேரை இன்று அதிகாலை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணைக்குப் பிறகு இன்று இரவு மணிகண்டனை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
    கைது செய்யப்பட்ட 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று முன்தினம் இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, பூமிநாதன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆடு திருடும் கும்பல், தஞ்சை- திருச்சி எல்லையில் இருக்கக்கூடிய கல்லணைக்கு அருகே பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உள்பட 3 பேரை இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

    இவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆதாரங்கள் மற்றும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, 3 பேரையும் புதுக்கோட்டை கீரனூர் பகுதிக்கு உப்பட்ட காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்..  திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல் நல்லடக்கம்
    ஆடு திருடர்களால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடல்  பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படட்து. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான சோழமாநகருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

    அதன்பின்னர் சோழமாநகர் இடுகாட்டில் பூமிநாதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருச்சியை அடுத்த பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

    குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  இது காவல்துறைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படாவிட்டால்  சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விடும்!

    கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதன்

    கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). 1995-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்துள்ளார்.

    நேர்மையாக பணியாற்றி வந்த இவர் போலீஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து கடந்த 1.7.2020-ல் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

    அப்போது முதல் தொடர்ந்து 1½ ஆண்டுகளாக இரவு ரோந்து பணியை மேற்கொண்டு வந்த பூமிநாதன் இரவு நேர குற்றசெயல்களை தடுத்தார். மேலும் இரவில் சுற்றித்திரியும் சமூக விரோத கும்பலுக்கு இவர் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏட்டு சித்திரைவேல் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயம் அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் உஷாரான பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.

    இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் தொடர்ந்து துரத்தினர். ஆனால் அந்த கும்பல் நிற்காமல் வேகம் காட்டினர்.

    இதற்கிடையே குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்லமுடியவில்லை. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு சென்றனர்.

    கீரனூரை அடுத்த களமாவூர் ரெயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எஸ்.ஐ. பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது பூமிநாதன் நவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.

    தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த பூமிநாதன் நடுரோட்டில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்தநிலையில் உதவிக்கு அழைத்த மற்றொரு எஸ்.ஐ. சேகர் அங்கு வந்து பார்த்தபோது, பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கொலையாளிகள் நிச்சயம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    போலீசார் விசாரணை

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் ஆடுகளை திருடி கறிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஆடு திருடு போன புகார்களின் அடிப்படையில் கைதானவர்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை தயாரித்த போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. அதே திசையில் கொலையாளிகள் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைரேகை நிபுணர்களும் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    அதேபோல் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆடு திருடும் கும்பலால் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    புதுக்கோட்டையில் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற சம்பவத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    புதுக்கோட்டை: 

    திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் டிஐஜி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக, 2 டிஎஸ்பிக்கல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ×