என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஒரு கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதை காணலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைகளிலும், அணைக்கட்டிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் தடுப்புகளை தொட்டப்படி தண்ணீர் இருப்பதை காண முடிகிறது. இதனால், கிணற்று பாசனங்களை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை லேசாக மழை தூறியது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பல இடங்களில் இதே நிலைமை தான் இருந்தது.

Next Story