என் மலர்
நீலகிரி
- தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்
- தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வரலாற்று சாதனை படைத்ததாக அமைச்சர் பெருமிதம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு ஐ.டி.ஐ நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்பமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு புதிய மையத்தை குத்துவிள க்கேற்றி தொடங்கி வைத்த னர்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலா ளர் குமார்ஜெயந்த், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன்மே ம்பாட்டுத்தறை அமைச்சர் சி.வி.கணேசன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-
குன்னூர் அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டு உள்ளது.
உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
குன்னுார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு 90 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பயிலும் சி.என்.சி மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியை தமிழக மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குன்னூர் தொழில்பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து உள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழி ல்பயிற்சி நிலையங்கள் தெடங்கப்ப ட்டு உள்ளன. இது வரலாற்று சாதனை ஆகும்.
அரசு தொழி ல்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள், உள்நாடு-வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியம ர்த்தப்படுவர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் சக நண்பர்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
- இறந்த மாட்டின் உடலில் பூச்சிமருந்து கலந்து சாகடித்தார்
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலிகள் அடித்து கொன்றதால் ஆத்திரம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் எமரால்டு நேரு நகர் பாலம் அருகே 2 புலிகளை விஷம் வைத்த கொன்றதாக விவசாயி சேகர் என்ப வரை வனத்து றையினர் கைது செய்த விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து வனத்துறை யினர் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோத்தகிரி அடுத்த எமரால்டு வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. எனவே அவற்றை டாக் டர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புலிகள் இறந்து கிடந்த அதே பகுதியில் ஒரு மாட்டின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் உடலிலும் பூச்சிக் கொல்லி மருந்தின் வாசனை தென்பட்டது. எனவே செத்துப் போன மாட்டின் உடம்பில் விஷம் தடவி யாரோ சிலர் புலி களை கொன்று இருக்கலாம் என்று வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சிலரிடம், வளர்ப்பு மாடு காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டது. இதில் எமரால்டு பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் ஒரு பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது.
எமரால்டு பகுதியில் சேகர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் விவ சாயம் மற்றும் கால்நடை களையும் வளர்த்து வருகி றார். இந்தநிலையில் அவரது கால்நடைகள் கடந்த 2019-ம் ஆண்டு புலி தாக்கி இறந்து உள்ளன. மேலும் அந்த பகுதியில் பலரின் கால்ந டைகளும் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலி கள் தாக்கி அடித்து கொன் றன. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டு உள்ளார். அதனை 8 வயது புலி தின்றதால் உயிரிழந்தது தெரிய வந்து உள்ளது. இதையடுத்து சேகரை வனத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவலாஞ்சி வனப்பகுதியில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியின் உடலில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அதிக ளவில் இருந்தது. எனவே அது விஷம் கலந்த இறைச் சியை தின்று பலியானது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், புல் தரையில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால் தான் இறந்ததா? என்பது பற்றி இதுவரை உறுதியாக தெரியவில்லை. அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவை சக விலங்குகள் தாக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இருந்த போதிலும் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்த மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
- விவேக்கை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள கடநாடு மந்தட்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 53). விவசாயி.
இவரது மனைவி சாந்தி. இவருக்கு யஸ்வந்தி என்ற மகளும், விவேக் (25) என்ற மகனும் உள்ளனர். யஸ்வந்தி திருமணம் முடிந்து பெங்களூரில் வசித்து வருகிறார். விவேக் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று சாந்தி பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இங்கு ரகுவும், விவேக்கும் மட்டும் இருந்தனர். இரவில் ரகுவுக்கும், மகன் விவேக்கிற்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
சமீபத்தில் ரகு, தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றுள்ளார். அதில் ஒரு தொகையை மகன் விவேக்கிற்கு கொடுத்துள்ளார். அந்த சொத்தை விற்காமல் தனக்கே கொடுத்திருக்கலாமே, ஏன் சொத்தை விற்றாய் என கேட்டு விவேக் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதேபோல தான் நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் மாறி, மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர்.
பின்னர் ரகு கட்டிலில் போய் படுத்துக் கொண்டார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத விவேக், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்தார். ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் ரகுவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். ரகு, அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிர் விட்டார்.
ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரகு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அவர்கள் தேனாடு கம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விவேக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
- புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.
இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு அதன் மாமிசத்தை புலி உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேகரிடம் விசாரணை நடத்தியதில், அவரது மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக தெரியவந்துள்ளது.
- மாலை நேரங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு திருப்பலி
- பொதுமக்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னை மீது தூவி வழிபாடு
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தூய ஆரோக்கிய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் வேளாங்கண்ணியில் திருவிழா தொடங்கப்பட்டதுடன் அதனை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கோத்தகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நடைபெறும்.
கடந்த 1 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வாரம் முழுவதும் மாலை நேரங்களில் அன்பியம் சார்பாக தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை மிக விமரிசையாக பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. காலை 6,7,8 மணி சிறப்பு திருப்பதிகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிருஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கோத்தகிரி பங்கு தந்தை அமிர்தராஜ் முன்னிலையில் ஆடம்பர பாடல் திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயகுமார் தலைமையில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன் னையின் ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. அன்னையின் ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய பிரதான வீதிகளான பஸ் நிலையம், கடைவீதி, காம்பாய் கடை,காம ராஜர் சதுக்கம்,ராம்சந்த் உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தேர்பவனியின் போது பொதுமக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதற்கும், வேண்டுதல்கள் நிறைவேறவும் கடலை மிளகை ஆரோக்கிய அன்னையின் மீது தூவி வழிபட்டனர். பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த திருவிழாவிற்கு நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர்,குன்னூர் டி.எஸ்.பி. குமார், கோத்த கிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாதவ் கிருஷ்ணன், ரமேஷ்,பப்பிலா ஜாஸ்மின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- போக்குவரத்து சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை
- தொட்டப்பெட்டாவுக்கான போக்குவரத்து சாலை சீரமைப்பு பணிகள் இன்று தொடங்கின
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக தினமும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.
அங்கு உள்ள சுற்றுலாதலங்களில் தொட்டப்பெட்டா மலைச்சிகரம் குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரம் ஆகும்.
தொட்டப்பெட்டாவில் அமைந்து உள்ள தொலை நோக்கி மூலம் அங்கு உள்ள பச்சைப்பசேல் மலைத்தொடர்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசிக்க முடியும்.
எனவே சுற்றுலா பயணிகள் தொட்டப்பெட்டாவுக்கு விரும்பி சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் இருந்து தொட்டப்பெட்டா செல்லும் போக்குவரத்து சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
எனவே அந்த சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி தொட்டப் பெட்டா மலைச்சிகரத்துக்கான போக்குவரத்து சாலை சீரமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
அங்கு தொடர்ந்து 3 நாட்கள் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.
எனவே தொட்டப் பெட்டா மலைச்சிகரத்துக்கு இன்று முதல் (13-ந்தேதி) புதன்கிழமை வரை செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ள சுற்றுலா பயணிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வனத் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
- அதிகாரிகள் பணியைத் தொடங்காமல் திரும்பிச் சென்றனா்
ஊட்டி,
ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் விவசாய நிலப்பரப்பு அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவேண்டும்.
விவசாய நிலப்பரப்பில் அமைக்கக்கூடாது என்று தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் விவசாயப் பகுதியில் வனத் துறையினா் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பணியைத் தொடங்க வந்த வனத் துறையினரை தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் குவிக்கப்பட்டனா்.
இருப்பினும் விவசாயிகள் எதிா்ப்பால் பணியைத் தொடங்காமல் வனத்துறையினா் திரும்பிச் சென்றனா்.
- ஊர்வலமாக புறப்பட்டு சென்று எத்தையம்மன் கோவிலில் வழிபாடு
- தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க வாரிய அதிகாரி உறுதி
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது 11-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 10-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய, கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30 ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குறித்த நேரத்தில் பஸ்கள் வராததால் பொதுமக்கள், பயணிகள் தவிப்பு
- கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க கோரிக்கை
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், கோவைக்கு உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
- பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதாக பேட்டி
ஊட்டி,
சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் கரன்சி அங்கன்வாடிமைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் பர்லியார் ரேஷன் கடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து கரன்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிச்சோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் சோலாடாமட்டம் சாலைப்பணிகள், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நூலக சீரமைப்பு பணி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி கிணறு, எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என ரூ.1.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.
பேரட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி சமையல்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்-அப் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் அங்கு படிக்கும் 1-5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி, ஊராட்சியின் பல்வேறு பகு திகளில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.குன்னூர் தாலுகா, உலிக்கல் பேரூராட்சி மற்றும் மேலூர், உபதலை, பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் வளர்ச்சித்தி ட்டப்பணிகளை ஆய்வு செய்து அங்கு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை பார்வை யிட்டோம்.குன்னூர் அடுத்த பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மோகனகு மாரமங்கலம், ஆறுமுகம், பர்லியார் ஊராட்சி தலைவி சுசீலா, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
- ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.
இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. இறந்து கிடந்த புலிகளின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
அவலாஞ்சி வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடக்கும் 2 புலிகளுக்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டிதலின்படி இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன்பின்னரே புலிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி வனப்பகுதியில் புலிகள் சாவு தொடர்கதையாக நீடித்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. அங்கு உள்ள மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி செத்து கிடந்தது.
நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்த நிலையில் அவலாஞ்சி வனப்பகுதியில் தற்போது மேலும் 2 புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் காட்டு விலங்குகளை கொன்று அவற்றை ஊருக்குள் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். புலியின் தோல், பற்கள் ஆகியவை மதிப்புவாய்ந்தது. எனவே வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது.
புலிகள் இறப்பு தொட ர்பாக உண்மை நிலையை கண்டறிய வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள், வனக்கா ப்பாளர், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
- இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது
- திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ஜெகநாதன், செயல்அலுவலர் மணிகண்டன் செய்தனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுஅக்ரகாரம் வேணுகோபாலசுவாமி கோவிவில் ஜெயந்தி விழா கோலாகலமாக நடை பெற்றது. அப்போது சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடத்தப்பட்டது. மாலையில் பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
பின்னர் உறியடி உற்சவம்சிறப்பாக நடந்தது. இன்று ) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை தர்கார் ஜெகநாதன், ஆய்வர் ஹேமலதா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.






