என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 நாட்கள் தடை"

    • போக்குவரத்து சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை
    • தொட்டப்பெட்டாவுக்கான போக்குவரத்து சாலை சீரமைப்பு பணிகள் இன்று தொடங்கின

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக தினமும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.

    அங்கு உள்ள சுற்றுலாதலங்களில் தொட்டப்பெட்டா மலைச்சிகரம் குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரம் ஆகும்.

    தொட்டப்பெட்டாவில் அமைந்து உள்ள தொலை நோக்கி மூலம் அங்கு உள்ள பச்சைப்பசேல் மலைத்தொடர்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டு ரசிக்க முடியும்.

    எனவே சுற்றுலா பயணிகள் தொட்டப்பெட்டாவுக்கு விரும்பி சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் இருந்து தொட்டப்பெட்டா செல்லும் போக்குவரத்து சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    எனவே அந்த சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி தொட்டப் பெட்டா மலைச்சிகரத்துக்கான போக்குவரத்து சாலை சீரமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

    அங்கு தொடர்ந்து 3 நாட்கள் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.

    எனவே தொட்டப் பெட்டா மலைச்சிகரத்துக்கு இன்று முதல் (13-ந்தேதி) புதன்கிழமை வரை செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ள சுற்றுலா பயணிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×