search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி குன்னூர் அரசு ஐ.டி.ஐ நிறுவனத்தில் ரூ.34.65 கோடி செலவில் தொழில்நுட்ப மையம்
    X

    நீலகிரி குன்னூர் அரசு ஐ.டி.ஐ நிறுவனத்தில் ரூ.34.65 கோடி செலவில் தொழில்நுட்ப மையம்

    • தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தொடங்கி வைத்தனர்
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி வரலாற்று சாதனை படைத்ததாக அமைச்சர் பெருமிதம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு ஐ.டி.ஐ நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு தற்போது ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்பமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் (சுற்றுலா), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு புதிய மையத்தை குத்துவிள க்கேற்றி தொடங்கி வைத்த னர்.நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலா ளர் குமார்ஜெயந்த், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன்மே ம்பாட்டுத்தறை அமைச்சர் சி.வி.கணேசன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    குன்னூர் அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னுார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு 90 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பயிலும் சி.என்.சி மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியை தமிழக மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    குன்னூர் தொழில்பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து உள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 இடங்களில் ரூ.95.06 கோடி மதிப்பில் புதிய அரசு தொழி ல்பயிற்சி நிலையங்கள் தெடங்கப்ப ட்டு உள்ளன. இது வரலாற்று சாதனை ஆகும்.

    அரசு தொழி ல்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள், உள்நாடு-வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணியம ர்த்தப்படுவர். எனவே மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும்.

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் சக நண்பர்களும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

    Next Story
    ×