என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
    • தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.

    விலை சரிந்தது

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.

    • ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர்.
    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களது மகள்கள் யோசிகா (6), தர்ஷா(3).

    இவர்களும், அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் பிரபாகரன், சம்ருத், சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கிருத்திகா மற்றொரு பெண் குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர். அவர்கள் சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    தந்தை- மகள் பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே மரவாபாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தமிழழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது 3 வயது குழந்தை தர்ஷா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.

    சிகிச்சை

    படுகாயம் அடைந்த சதீஷ்குமார், விஜயலட்சுமி, கிருத்திகா, பிரபாகரன் , சம்ருத், யோசிகா மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 7 பேருக்கும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.

    • காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
    • சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ். இவர் பா.ஜனதா மாநில ஊடகப்பிரிவு பெறுப்பாளராக உள்ளார்.

    இவர் சமூக இணையதளங்களில் தி.மு.க., காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் நாமக்கல்லுக்கு வந்து பிரவின்ராஜை கைது செய்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதாக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் ஓட கிணத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58).இவர் இரும்பு பாலம் அருகே உள்ள தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். நல்லூர் அருகே தொட்டியம் தோட்டம் 4 ரோடு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சக்திவேல் (39) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மோகன் பிரசாந்த் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் தளவாபாளை யத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    தற்கொலை

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காரணம் என்ன?

    சத்ய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.இது குறித்து

    பரமத்தி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்ய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 5 வருடத்திலேயே சத்யபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும்.

    நாமக்கல்:

    பரமத்திவேலூரில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வர்த்தக நிறுவனங்களில் நடைபெற்று வரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்களின் வருகை இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நகைக்கடை, ஓட்டல், மளிகை கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
    • முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாமக்கல் நகருக்கு பைபாஸ் ரோடு மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி சுமார் 80 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும். பின்னர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மூலம் இந்த பஸ் நிலையம் திறப்பு விழா நடைபெறும்.

    இந்த புதிய பஸ் நிலை

    யத்திற்கு அணுகுசாலை அமைக்க, முதலைப்பட்டி யிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம், நெடுஞ்சாலை துறையின் கிராம சாலைகள் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 25 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பஸ் நிலையத்திற்கு பைபாஸ் ரோடுடன் கூடிய அணுகு சாலை அமைக்கப்படும். நாமக்கல் நகருக்கு புதிய பை-பாஸ் ரோடு திட்டம் ரூ. 194 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பை-பாஸ் ரோட்டில் இருந்து, புதிய பஸ் நிலையத்திற்கு 200 மீட்டர் அளவில் அணுகு சாலை அமைக்கப்படுகிறது.

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தின் மொத்த பரப்பு 12.89 ஏக்கர். சுமார் 10 ஏக்கர் பரப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில், 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 7 பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 ஏ.டி.எம் மையங்கள், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, 200 இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம், 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாமக்கல்

    நகராட்சி சேர்மன் கலாநிதி,

    துணைசேர்மன் பூபதி, கவுன்சி லர்கள் சிவக்குமார், சங்கீதா,

    நகராட்சி கமிஷனர் சென்னு

    கிருஷ்ணன், நெடுஞ்சா லைத்துறை உதவி செயற்பொ

    றியாளர் பரிமளா உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

    • 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ரோப்கயிறு வேகமாக சுற்றியதால் அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே வைரம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் (33). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில் சித்தாளந்தூரை சேர்ந்த கார்த்திக் (32), நவீன்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என டிராக்டர் மூலம் ரோப்பை கட்டி அதன் மூலம் கார்த்திக் மேலே வர முயற்சித்த போது திடீரென ரோப்கயிறு வேகமாக சுற்றியதால், அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்க லத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சா மிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • விஜயகுமார் ( 32), இவரது மனவைி சந்தியா (27), இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், அதன்படி நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
    • இதையடுத்து விஜய குமாைர, சந்தியா கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிப்பாளையம் அவி னாசிப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( 32), இவரது மனவைி சந்தியா (27), இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், அதன்படி நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சரமாரி தாக்குதல்

    இதையடுத்து விஜய குமாைர, சந்தியா கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை குலைந்த விஜய

    குமார் படுகாயம் அடைந்து கதறினார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயகுமார் எலச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் ேபரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தியாவை கைது செய்தனர். தொடர்ந்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைக்க அவரை அழைத்து வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    சேலம் மத்திய சிறை அருகே வந்த போது மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறிய சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×