பரமத்தி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பரமத்தி அருகே  இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

கரூர் மாவட்டம் தளவாபாளை யத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

தற்கொலை

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்யபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ள விட்டதில் சேலையால் தூக்குப்போட்டு சத்யபிரியா தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காரணம் என்ன?

சத்ய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.இது குறித்து

பரமத்தி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்ய பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகி 5 வருடத்திலேயே சத்யபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com