என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
வர்த்தக நிறுவனங்களில் நவீன கேமிரா பொருத்த வேண்டும்
- பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும்.
நாமக்கல்:
பரமத்திவேலூரில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் பரமத்திவேலூரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வர்த்தக நிறுவனங்களில் நடைபெற்று வரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தரமான சி.சி.டிவி கேமராவை அவசியம் பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்களின் வருகை இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை வாடிக்கையாளர்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நகைக்கடை, ஓட்டல், மளிகை கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






