என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப்பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப் பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.

    சேலம்-கரூர் அகல ரெயில்பாதையில் உள்ள ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின் றன.கொரோனோ காலத்திற்கு முன்பு நின்று சென்ற ரெயில்கள் கூட அதன்பிறகு நிற்பதில்லை. இதனால் ராசிபுரம் பகு தியைச் சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல அருகா மையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று செல்ல வேண்டி உள்ளது.

    ஆகையால் ராசிபுரம் பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ராசி புரம் வழியாக செல்லும் சென்னை-பழனி எக்ஸ் பிரஸ் ரெயில், நாகர்கோ வில் -பெங்களூர் எக்ஸ்பி ரஸ் ரயில், நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் கடந்த 15-ந் தேதி ரெயில்வே துறை தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு ஒன்றை அளித்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்று தற்போது ரெயில்வே துறை ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ராமேஸ்வரம்-ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே துறை அனுமதி அளித்துள் ளது. இதற்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். 

    • தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் ஆவண பதிவுகளை செய்து வருகின்றனர்.
    • சர்வர் பழு தானதால் கணினி இயங்க வில்லை என்றனர். இதனால் மதியம் வரை காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திருப்பிச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வரு மான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் திருத்தும் பணி, வாக்காளர் அடை யாள அட்டை போன்ற பல்வேறு பணிகளுக்கு, தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் ஆவண பதிவுகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் கணினி முறையில் பதிவு செய்ய 25-க்கும் மேற்பட்டோர் காத்திருந்த னர். ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழு தானதால் கணினி இயங்க வில்லை என்றனர். இதனால் மதியம் வரை காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திருப்பிச் சென்றனர்.

    மேலும் தாலுகா அலுவல கத்தில் அரசு பொது இ-சேவை மையத்திற்கு வரும் பொது மக்களை, தனியார் இ-சேவை மையத்துக்கு செல்லுமாறு கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரி யம்‌ மற்றும்‌ உடலுழைப்புத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியம்‌ மூலம்‌ நாமக்கல்‌ மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம்‌ கலெக்டர் உமா‌ தலைமை யில்‌ நடைபெற்றது.
    • தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள்‌, நிர்வாக தரப்பு பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு தரப்பு பிரதிநிதிகள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டனர்‌.

    நாமக்கல்:

    நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் நாமக்கல் மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத் திட்டம்), தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இதில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டூநர்கள் நல வாரியங்களில் இது நாள்வரை 3,75,708 பயனாளிகளுக்கு ரூ.195 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 812 நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. மே மாதத்தில் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது என்று தெரிவிக்கப் பட்டது. வீட்டு வசதித்திட்டம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது,

    • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

    நடபாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ந் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்பு கள் என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடபாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை.

    தமிழகத்தை பொறுத்தவரை கறிக்கோழிக்கு 1.5 லட்சம் டன், கோழி பண்ணைகளுக்கு 2 லட்சம் டன், கறவை மாடுகளுக்கு 2 லட்சம் டன் அடர் தீவனம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் தீவனப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திருவாசகம் முற்றோதலும், தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை யும், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    இதில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு விற்பனைச்‌ சங்கத்தில்‌ பிரதிவாரம்‌ சனிக்கிழமை மஞ்சள்‌ ஏலம்‌ நடைபெற்று வருகிறது.
    • மஞ்சள்‌ ஏலம்‌ போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால்‌ ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்‌.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்த மஞ்சள் ஏலம் போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புது மஞ்சள் ஏலம் ஆரம்பித்த நாள் முதலே போதிய இடவசதி இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறுமா? இல்லையா? என போன் மூலம் கேட்டுக் தெரிந்த பிறகே மஞ்சள் கொண்டு வரவேண்டி உள்ளது. இந்த ஆண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விற்பனை செய்வதும் கடினமாக உள்ளது. இந்த ஆண்டு திருச்செங்கோடு நகரின் பல பகுதிகளில் வாடகை கிடங்குகளிலேயே ஏலம் நடைபெறுகிறது.

    அதனால் கிடங்குகள் உள்ள இடங்களை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இதனால் லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. வாடகை கிடங்கு உள்ள இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. இந்த சங்கத்திற்காக 2000-ம் ஆண்டு அரசால் சுமார் 5 ஏக்கர் நிலம் கைலாசம்பாளை யத்தில் வழங்கப்பட்டு இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட சங்கத்தால் எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    அங்கு கிடங்கு கட்டினால் வாடகை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது. இதற்கு கூட்டுறவு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கிடங்குகள் கட்ட வேண்டும்.

    விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டரிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, உதயா நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் ஆய்வு செய்தார்.
    • புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் கலையரங்கம், பேவர் பிளாக்,எஸ்.கே.பி நகர் மெயின் சாலை மற்றும் 6 வது தெரு வரை சாலை மேம்பாட்டு பணி, கழிவு நீர் கால்வாய், ஊஞ்சபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் வீதியில் சிமெண்ட் காங்கிரிட் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தேவனாங் குறிச்சி ஊராட்சியில் கீழேரிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமையல் கூடம், கழிப்பறை பராமரிப்பு, நாடார் தெரு பகுதியில் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டு ள்ளதையும், பழையபாளையம் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, உதயா நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப் பட்டு, குடிநீர் குழாய் விரிவுப்படுத்தப்

    பட்டுள்ளதை அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் மோடமங்கலம் ஊராட்சி, மோடமங்கலம் பாவடியில் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரபூபதி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், சுமதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று கந்தசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியவில்லை என்பதால், பிளக் பாயிண்டில் இருந்து பிளக்கை பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தசாமிக்கு யோகலட்சுமி என்ற மனைவியும், மதன் (3) மற்றும் 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.
    • இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்றது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.

    அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. மேலும் சிறிது தூரம் தரதர வென காரை இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கி யதால் லோக நாதனின் உடல் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் லோகநாதனின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.

    உயிரிழந்த லோகநாதன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அவரது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றபோது விபத்துக்கு உள்ளாகி இறந்தது குறிப்பி டத்தக்கது. இதனிடையே இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் சிக்கியதா கவும், அதில் வந்த 2 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் இறந்த லோகநா தனின் உடலை பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடச்சேரி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.
    • அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை யில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே கூடச்சேரி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண்மைதுறை, வரு வாய்துறை, கால்நடைத் துறை , மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை யில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    அரசு மானியத் திட்டங் கள் பற்றி அறிந்து கொள்ள வும் மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் உழவன் செயலியை பயன்படுத்துவது குறித்தும் தெரிவிக்கப் பட்டது.நடப்பாண்டிற்கு காய்கறி விதைகள், நாற்று கள், பழச்செடிகள் ஆகியவை தோட்டக்கலைத் துறை மூலம் கூடச்சேரி கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை உதவி அலுவலர் சிவமாணிக்கம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தோட்டக் கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் சிவமாணிக்கம், ரவி, வேளாண்மை உதவி அலுவலர் பூபதி, கால்நடை மருத்துவர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் முத்துசெழியன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி (வயது 50). இவர் நேற்று திருச்சி ரோடு, சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரிய சாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், லேசான காயங்க ளுடன் தப்பி னார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
    • ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.

    விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ×