என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேவர் பிளாக் அமைக்கப்படுவதை கலெக்டர் உமா ஆய்வு செய்த காட்சி.
திருச்செங்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
- தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, உதயா நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் ஆய்வு செய்தார்.
- புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் கலையரங்கம், பேவர் பிளாக்,எஸ்.கே.பி நகர் மெயின் சாலை மற்றும் 6 வது தெரு வரை சாலை மேம்பாட்டு பணி, கழிவு நீர் கால்வாய், ஊஞ்சபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் வீதியில் சிமெண்ட் காங்கிரிட் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தேவனாங் குறிச்சி ஊராட்சியில் கீழேரிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமையல் கூடம், கழிப்பறை பராமரிப்பு, நாடார் தெரு பகுதியில் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டு ள்ளதையும், பழையபாளையம் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, புதிய ஆழ்துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தண்ணீர் பந்தல்பாளையம் ஊராட்சி, உதயா நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப் பட்டு, குடிநீர் குழாய் விரிவுப்படுத்தப்
பட்டுள்ளதை அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர் மோடமங்கலம் ஊராட்சி, மோடமங்கலம் பாவடியில் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரபூபதி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், சுமதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






