என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் மரணம்

- மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று கந்தசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியவில்லை என்பதால், பிளக் பாயிண்டில் இருந்து பிளக்கை பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தசாமிக்கு யோகலட்சுமி என்ற மனைவியும், மதன் (3) மற்றும் 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.