என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வர் பழுது
- தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் ஆவண பதிவுகளை செய்து வருகின்றனர்.
- சர்வர் பழு தானதால் கணினி இயங்க வில்லை என்றனர். இதனால் மதியம் வரை காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திருப்பிச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வரு மான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் திருத்தும் பணி, வாக்காளர் அடை யாள அட்டை போன்ற பல்வேறு பணிகளுக்கு, தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தில் ஆவண பதிவுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் கணினி முறையில் பதிவு செய்ய 25-க்கும் மேற்பட்டோர் காத்திருந்த னர். ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழு தானதால் கணினி இயங்க வில்லை என்றனர். இதனால் மதியம் வரை காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திருப்பிச் சென்றனர்.
மேலும் தாலுகா அலுவல கத்தில் அரசு பொது இ-சேவை மையத்திற்கு வரும் பொது மக்களை, தனியார் இ-சேவை மையத்துக்கு செல்லுமாறு கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






