என் மலர்
நாகப்பட்டினம்
- கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை.
- ஒரு கிலோ ரூ.50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
நாகப்பட்டினம்:
வெயில் காலத்தில் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் வெள்ளரி பிஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறது.கோடை காலம் துவங்கியவுடன்,வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக இருக்கும்.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளான பூவைத் தேடி,விழுந்தமாவடி,புதுப்பள்ளி,வேட்டைகாரணிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பயிர் செய்த வெள்ளரிச்செடிகள், தற்போது பூ விட்டு வளர்ந்து வருகின்றன. இருப்பினும் பல்வேறு இடங்களில் வெள்ளரி செடியை ஒருவித வைரஸ் நோய் தாக்குவதால் வெள்ளரி பிஞ்சுகள் போதிய வளர்ச்சியின்றி உள்ளது.
குறிப்பாக நோய் தாக்குதல் காரணமாக பெரும்பாலான வெள்ளரி செடிகள் காய்க்கும் பருவத்திலேயே இலைகள் கருகியும் பூக்கள் கொட்டி விடுவதால் போதிய விளைச்சல் இல்லாமல் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மோட்டார் மூலம் நீர் பாச்சி சாகுபடி செய்து, கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூபாய் 30 முதல் 40 வரை மட்டுமே விற்பனையானது.ஆனால் இந்தாண்டு ஒரு கிலோ ரூ. 50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.இந்தநிலையில்உரிய விலை கிடைத்தும் போதிய விளைச்சல் இல்லை என்கின்றனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.
- 30 நாட்களில் நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது;-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மல கசடு கழிவுநீரைவாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பா டுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் படிவம் பெறபட்ட 30 நாட்களில்நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.
இதற்கான கட்டணம் ரூ. 2000 உரிமம் பெற்ற வாகனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையா ளர்கள் உடனடியாக உரிமம் பெற்று கொண்டு இயக்க வேண்டும். உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் .மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
- குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ–ட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலை–யில் விழுந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் தகவலின் பேரில் கால்நடை டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் அங்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர், குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. விடம் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், புயல் குமார், திருமாவளவன், ரவி, திருமுருகன், ராமமூர்த்தி, செந்தில் நாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்தியஅரசு அறிவிக்கும் அகவி லைப்படிக்கு இணையான தொகையை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொ ண்ட ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து பேச வைக்கப்படும் என்றார்.
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் உள்ள வேதநாயகி அம்பாள் உடனுறை மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.
பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்று மேலமறைக்காடர், வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மன்றத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாட்டனர்.
நாகப்பட்டினம்:
வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற 108 குத்துவிளக்கு பூஜை நாகப்பட்டினம் வெளிபாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த முச்சந்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது ஆலயத்தின் ஆண்டு பங்குனி திருவிழா 25ம் தேதி துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
- இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.
அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.
- இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
- போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவால யத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராத னைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.
அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.
தொடர்ந்து இன்று மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையா கவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.
இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.
பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம் போல் அதன்படி பங்குனி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்குஉள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- கிறிஸ்தவர்களின் தவக்காலம் பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கியது.
- நேற்று பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்களுக்கு புனித நீரால் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.
இன்று புனித வெள்ளியை முன்னிட்டு பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் திருவுருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
- நாகப்பட்டினத்தில் நியாய விலைக் கடையை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் பெருங்க டம்பனூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு, மாவட்ட கலெக்டர்.
அருண் தம்புராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.
இதில், ஒன்றிய குழு தலைவர் அனுசியா, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பொது மக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பாக பள்ளியைச் சுற்றியுள்ள குத்தாலம் மேலத்தெரு நடுத்தெரு கீழத்தெரு மற்றும் கழுங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் மக்களிடையே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இலா செல்லம்மாள் பேரணியை துவங்கி வைத்தார்.
பள்ளியின் தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் தேசியப் பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.சந்தோஷ் காட்சன் ஐசக் ஆசிரியர் செய்திருந்தார்.






