என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    • முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    தமிழக அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் நூறு வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் 1916 -ம் ஆண்டு பிறந்த அதிக வயதுடைய 107 வயதான நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம்.

    தென்னரசு நேரில் சந்தித்தார்.

    அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி , முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

    அனைவரும் நலமாக வாழவேண்டும் எனவும், கருணாநிதி எனக்கு வேண்டப்பட்டவர் என்றும் முதிர்ந்த குரலில் உரையாடிய முதியவரின் காலில் விழுந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் ஆசி பெற்றனர்.

    முதியவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமைச்சர், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் முதியவருக்கு வீட்டிற்கே வந்து மருத்துவ உதவி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்;-

    எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்க கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறிய அமைச்சர், இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துருதஸ்டமானது என திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பரிசீலனை நடந்து வருகிறது என்று கூறினார்.

    • குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கப்பெருமாள் குத்தகையில் உள்ள காமாட்சி அம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக முனீஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பின், குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா வந்து தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும், அப்பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காது, மூக்கு, தொண்டை குறித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முகாமில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவு றுத்தலி ன்படி கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.

    வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன்,பொது மருத்துவம், கண் மருத்து வம்,பல் மருத்துவம்,சித்த மருத்துவம்,யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை,தோல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    இதில் 1018 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன்,ஊராட்சி துணைத் தலைவர் பாலு, ஊராட்சி செயலர் சசிகுமார், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 5 மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளும்,சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 5 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்பட்டது.

    • தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான மஞ்சள் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
    • விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ரெயில்வே மேம்பால பணி ஆய்வு செய்து கூறியதாவது:-

    நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்டமன்றத்தில் நான் இது குறித்து பேசினேன்.

    அப்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் பணி தொடங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். அதன்படி ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

    விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொ றியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
    • குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசிய விபரங்கள் வருமாறு:-

    முத்துலட்சுமி (அ.தி.மு.க):

    கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    அதனை சரி செய்ய வேண்டும்.

    ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    செல்வி சேவியர் (தி.மு.க.):

    நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.

    மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

    தலைஞாயிறு பகுதிக்கு காவிரிநீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தீபா (அ.தி.மு.க.):

    அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பணிட வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

    இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசுகையில்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநி லைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

    • மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மற்றும் மயிலாடு துறை மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இடைய பேரிடர் மீட்பு ஒத்திகை போட்டி நடைபெற்றது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த போட்டி நாகை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் நடைபெற்ற போட்டியில், நாகை- மயிலாடுதுறை மாவட்டங்க ளை சேர்ந்த நாகை, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட 14 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் இருக்கும் இடத்தில் கையில் உள்ள பொருட்களை கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    4 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    • காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    வேதாரண்யம்:

    காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி பணிகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    மேலும், தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி வளர்ந்து 30 நாட்கள் ஆனநிலையில் தண்ணீர் இன்றி முளைப்பு திறன் பாதித்த நிலையில் மகசூல் இனி பயன்தராது என்பதால் நூற்றுக்கணக்கான ஏக்கர் டிராக்டர் விட்டு உழுதுவிட்டனர்.

    இதேநிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் எனவே டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக கூட்டி தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் .

    மேலும், குறுவை சாகுபடி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மறைமலை நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.

    ஆடித்திரு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    வெளிப்பாளையம் ஏழைப்பி ள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு மறைமலைநகர் கருமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்தனர்.

    பூச்சொரிதல் விழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    • நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
    • ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

    அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

    பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

    செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

    • கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளலாம்.
    • அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    நாகை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள்/கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை தேவைகள், மீன்வளம் மற்றும் இதர துறை சார்ந்த கோரி க்கைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×