அரசு பள்ளியில் இயற்கை வள பாதுகாப்பு தினவிழா

ஓவிய போட்டி நடந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.
பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஓவியப்போட்டி நடந்தது. அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com