என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி வேளாங்கண்ணி வந்த பக்தர்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் பகுதியை சேர்ந்தவர் ஊர்காவலன். லாரி டிரைவர். இவர் லோடு ஏற்றிக் கொண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதிக்கு வந்தார்.

    அருந்தவபுலம் கடை வீதியில் லாரியை நிறுத்தி விட்டு படுத்து தூங்கினார். பின்னர் லாரியை எடுக்க வந்தார். அப்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் பிரகாஷ் உள்பட 6 பேர் ஒரு வேனில் வேளாங்கண்ணி வந்தனர். வேனை அருள்ராஜ் ஓட்டி வந்தார்.

    திடீரென வேன் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரி டிரைவர் ஊர்காவலன், வேன் டிரைவர் அருள்ராஜ், வேனில் பயணம் செய்த பிரகாஷ், ரமேஷ், ரம்யா, அண்ணா செல்வி, சீனி, ஒரு குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தலைஞாயிறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேளாங்கண்ணி அருகே கத்தியால் கையை அறுத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பூக்காரத்தெரு அருகே உள்ள கடற்கரையோரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக தெற்கு பொய்கைநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து அவர், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு சோதனை செய்தனர். இதில் இறந்து கிடந்தவர் கத்தியால் கையில் அறுத்து கொண்ட காயம் இருந்தது. மேலும், அருகே சவரம் செய்யும் கத்தியும், பை ஒன்றும் கிடந்தது. இதையடுத்து பையை எடுத்து பார்த்தபோது அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகைக்கடை தெருவை சேர்ந்த ஜோதிக்குமார் போலார் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஜோதிக்குமார்போலார் சவரம் செய்யும் கத்தியால் கையில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், ஜோதிக்குமார் போலார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரட்டை இலை சின்னம் பெற தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார். யாருக்கு கொடுக்க முயன்றார்? அதிகாரி யார் என்பதை தெரியபடுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உப்பு சத்தியாகிரக 87-ம் ஆண்டு நினைவு நாளையெட்டி அங்குள்ள நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நூற்றுக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து ஊர்வலமாக அகஸ்தியன் பள்ளிக்கு சென்றனர்.

    அவர்கள் தேசப்பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோ‌ஷத்தையும் முழங்கி சென்றனர். பின்பு அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உப்பு அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டி.டி.வி. தினகரன் மீதான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். ஒரு கட்சியை பிரிக்கவோ, சேர்க்கவோ அச்சுறுத்தலாக இருக்க கூடாது.


    பாரதீய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் விபத்தில் சிக்கி கொள்ளும். நான் அ.தி.மு.க. வுக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவாளன் அல்ல.

    இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    அவர் யாருக்கு பணம் கொடுக்க முயன்றார்? அந்த அதிகாரி யார்? என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் பிரச்சினையில் மாறுபட்ட கருத்து உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

    முதலில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி விட்டு தற்போது தற்கொலை செய்யவில்லை என கூறுகிறார்கள்.

    தேர்தல் வரும் போது எல்லா கட்சிகளும் கூட்டணி சேரும். அது போல் காங்கிரசும் கூட்டணி சேரும். கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் காங்கிரசார் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம், கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச் செயலாளர் சக்தி.செல்வகணபதி துணைத் தலைவர் சண்முகவடிவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் போஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வந்தே மாதரம் கோ‌ஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்கு சென்று கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    ஆதார் பதிவு செய்தல் கட்டணமில்லை. 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்தல் கட்டணமில்லை.நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்குரூ.25. புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி முதலியன புதுப்பிக்க ரூ.25. ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ளுவதற்கு ரூ.10. மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொது மக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச்சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேதாரண்யம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள தோப்பு துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் நிதி மித்ரன் (வயது 3) இவன் ரோட்டோரம் விளையாடி கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவனை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கொள்ளிடம் அருகே குடும்ப பிரச்சினையில் ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பானுமதி (வயது 52) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், பானுமதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பானுமதி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கிருஷ்ணமூர்த்தியும் படுகாய மடைந்தார்.

    மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பானுமதி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணமூர்த்தி முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வறுகிறார்.

    இதுபற்றிய  புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிகுளம் மேலசேத்தி, வேப்பதேவன் காட்டை சேர்ந்தவர் மகாலிங்கம் என்பவர் மகன் அண்ணாதுரை (வயது 26). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் குட்டைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் குட்டையில் மூழ்கி இறந்து பிணமாக மிதப்பது தெரியவந்தது. அவர் வலிப்பு நோய் காரணமாக குட்டையில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பலியான அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பலியான வாலிபருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். அவர்கள் அண்ணாதுரை உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    வேதாரண்யம் அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுத்சேத்தியை சேர்ந்த பாப்பையன் மகன் ராமச்சந்திரன் (வயது 34) தொழிலாளி. இவர் மருதூர் கடைத் தெருவில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது நடுசேத்தி கிழக்கு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சத்தியமூர்த்தி (23) குடிபோதையில் வந்துள்ளார். அவர் ராமச்சந்திரனிடம் தகராறு செய்து அவரை கொத்தனார் வேலைக்கு பயன்படுத்தும் கரனையால் தலையில் தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனார் சத்திய மூர்த்தியை கைது செய்தார்.
    மயிலாடுதுறை பகுதியில் 2 வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாப்படுகை நாராயணபுரத்தை சேர்ந்தவர் ரமணி. இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ராதா. இவர் தனது குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ராதா மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு 2 அறைகளில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து ராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மயிலாடுதுறை வந்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ராதாவின் வீடு ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ளது. எனவே கொள்ளையர்கள் தண்டவாளம் வழியாக வந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே உள்ள கருவாக்கரை மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன். கூலித் தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனை கவனித்த கொள்ளையர்கள் வைத்தியநாதன் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்ப ணத்தை கொள்ளையடித்து செனறு விட்டனர்.

    இது குறித்து செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்ப்) குலோத்துங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யம் அருகே முன்விரோத பிரச்சினையில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரன் மகன் சித்திரவேல் (வயது 42), மாரியப்பன் மகன் வடிவேல் (வயது 42). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் வேலிப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று அந்த ஊரிலுள்ள சீதளா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு சித்திரவேல் மற்றும் வடிவேல் வீட்டிற்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து தங்கியுள்ளனர்.

    அப்போது முன்விரோத வேலிப் பிரச்சனை காரணமாக ஒருவருக்கொருவர் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கம்பு கட்டை அரிவாளால் தாக்கி கொண்டு தங்களது வீட்டிலுள்ள பொருட்களையும் ஒருவருக்கொருவர் அடித்து சேதப்படுத்திக் கொண்டனர்.

    இதில் இருதரப்பைச் சேர்ந்த தேத்தாகுடி வடக்கு கிராமம் வேடன் நகர் சுப்பிரமணியன் மகன் விஜயன் (30) என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வடிவழகன் (27) ஆகிய இருவரும் வெட்டுக் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விஜயன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கருப்பம் புலத்தை சேர்ந்த வீரன் மகன் சித்திரவேல், அகஸ்தியன் பள்ளி பூவன்தோப்பை சேர்ந்த வேதையன் மகன் பழனிச்சாமி, கருப்பம்புலத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சிவா ஆகியோர் மீதும், சித்திரவேல் கொடுத்த புகாரின் பேரில் கருப்பம்புலத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வடிவேல், தேத்தாகுடி வடக்கு சுப்பிரமணியன் மகன் விஜயன் மற்றும் தேத்தாகுடி வடக்கு பக்கிரிசாமி மகன் வடிவழகன் ஆகியோர் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    முன்விரோத பிரச்சினையில் இரு தரப்பினர் தாக்கி கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரில், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் புயல்பாலச்சந்திரன், லலிதா மற்றும் போலீசார் கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சிக்கல் விதைப்பண்ணை அருகே சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகையை அடுத்த செல்லூரை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல கீழ்வேளூரை அடுத்த சிக்கவலம் மெயின்ரோடு பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி (52) என்பவரையும், கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் ஊராட்சி எறும்புகண்ணி பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த முருகன் (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரிடம் இருந்து சுமார் 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம் அருகே வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவர் நேற்று கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு மாவடிவாய்க்கால் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பொன்னுசாமியின் மகன் ரவிச்சந்திரன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×