என் மலர்tooltip icon

    செய்திகள்

    நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 8 பேர் காயம்
    X

    நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 8 பேர் காயம்

    நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி வேளாங்கண்ணி வந்த பக்தர்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
    வேதாரண்யம்:

    தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் பகுதியை சேர்ந்தவர் ஊர்காவலன். லாரி டிரைவர். இவர் லோடு ஏற்றிக் கொண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதிக்கு வந்தார்.

    அருந்தவபுலம் கடை வீதியில் லாரியை நிறுத்தி விட்டு படுத்து தூங்கினார். பின்னர் லாரியை எடுக்க வந்தார். அப்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் பிரகாஷ் உள்பட 6 பேர் ஒரு வேனில் வேளாங்கண்ணி வந்தனர். வேனை அருள்ராஜ் ஓட்டி வந்தார்.

    திடீரென வேன் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரி டிரைவர் ஊர்காவலன், வேன் டிரைவர் அருள்ராஜ், வேனில் பயணம் செய்த பிரகாஷ், ரமேஷ், ரம்யா, அண்ணா செல்வி, சீனி, ஒரு குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தலைஞாயிறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×