என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் பழகி வந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண்ணின் பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்த சந்தோஷ் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது செல்போனில் திருட்டுதனமாக வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கண்ணன் (36) என்பவரிடம் காண்பித்துள்ளார். இந்த நிலையில் கண்ணனும், அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியயடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இது பற்றி தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சந்தோஷ், கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீர்காழி சாலை லட்சுமிபுரத்தில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதமன் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது
தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாகை மாவட்டத்தில் திமுக பெற்ற மிகப்பெரிய வெற்றி நான் எதிர்பார்க்காத வெற்றி ஆகும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றிக்கு முன்னோட்டம் ஆகும்.
மதத்தால் மொழியால் இனத்தால் பிளவுபடுத்த கூடிய ஒரு சூழ்நிலையை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ளவர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும் இரு கண்களாக தெரிகிறது. தமிழ் மொழியை பற்றி அவர்கள் கவலைப் படுவதே கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமல் பாஜகவுக்கும், மோடிக்கும் பாதம் தாங்குகிற ஒரு முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அமைச்சர் பாண்டியராஜன் இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடத்த விரும்புகிறோம் என்று வெட்கப்படாமல் ஒரு அமைச்சர் சொல்கிறார். காசுக்காக அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆட்சி எடப்பாடி ஆட்சி. இந்த நிலையில் தமிழக அரசு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு விருது கொடுக்கிறது.
நெடுஞ்சாலைத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் துறையை கையில் வைத்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு ஒப்பந்த பணி திட்டமிட்டு கொடுக்கப்படுகிறது. இதை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக முகாந்திரம் இருப்பதாக கருதியதால் நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சர் வசம் உள்ளதாலும் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.இதனை விசாரிக்க கூடாது என்று முதலமைச்சர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெற்றார். இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருந்திருக்க மாட்டார். இந்நேரம் கைதியாக இருந்திருப்பார். விரைவில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி மலரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அமைச்சர்களின் ஊழல்களையும் வெளியே கொண்டு வருவோம்.

மேட்டூர் அணை சரியாக திறக்கப்படாததாலும் நீர்நிலைகள் சரியாக தூர்வாரப்படாத தாலும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தைக் கேட்க அவசியம் இல்லை என்றும் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது.
காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முழு முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மணிமாறன்(வயது 26). கொத்தனார். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராகவி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மணிமாறனின் நண்பர் கொட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் விஸ்வநாதன்(21). இவர் பழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி விஸ்வநாதன் பழனியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மணிமாறன் வீட்டில் வைத்து மணிமாறனும், விஸ்வநாதனும் மது அருந்தினர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள குடிசையில் தூங்கினர்.
மறுநாள் அதிகாலை(பொங்கல் தினத்தன்று) ராகவி வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள மரத்தில் மணிமாறன் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த அக்கம ்பக்கத்தினர் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சேர்ந்து மணிமாறன் உடலை மீட்டனர்.
பின்னர் மணிமாறன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதி அவரது உடலை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர். அப்போது மணமாறன் பின்னந்தலையில் காயம் இருந்தது.
மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் கீழே விழுந்து அடிப்பட்டு இருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை எரித்தனர். அப்போது அவர்களுடன் இருந்த விஸ்வநாதனும் ஒன்றும் தெரியாதது போல இருந்து விட்டு மீண்டும் பழனிக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் மணிமாறன் சாவில் சந்தேகம் அடைந்த அவரது தாய் அகிலாண்டேஸ்வரி பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அறிந்த விஸ்வநாதன் போலீசார் விசாரணை நடத்தி தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தனது சொந்த ஊருக்கு வந்து எருக்கஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி திலகராஜிடம் சரணடைந்தார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் மணிமாறனை தான் மதுபாட்டிலால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டதாக ஒப்புக்கொண்டார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து அவர் ஏன் மணிமாறனை கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் குணநலபாடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ரூபன். இவர் தனியார் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை பின்தொடர்ந்து பேச்சு கொடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த மாணவி. குத்தாலம் அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வருகின்றேன் என சென்ற மாணவி அதன் பின்னர் திரம்பவில்லை.
இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியை ரூபன் கடத்தி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் ரூபன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகே உள்ள தென்நடார் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அம்மாகண்ணு (வயது 60). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அம்மாகண்ணு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது26). இவர் இசைக்குழு நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மயிலாடுதுறையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிகண்டன் மற்றும் சேந்தங்குடியை சேர்ந்த வீரையன், பெரியண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 17-ந்தேதி மணிகண்டன், வீரையன், பெரியண்ணன் ஆகியோர் பணம் வைத்து சூதாடினர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரையன், பெரியண்ணன் ஆகியோர் இந்த தகராறு குறித்து மணிகண்டனின் உறவினரான முனுசாமியிடம் முறையிட்டனர்.
முனுசாமி- மணிகண்டன் இடையே ஏற்கனவே பன்றி வியாபாரத்தில் போட்டி இருந்தது. இதனால் முனுசாமியும் மணிகண்டன் மீது ஆத்திரத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து முனுசாமி, வீரையன், பெரியண்ணன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் மணிகண்டன் மயிலாடுதுறை அருகே உள்ள
கீழப்பட்டமங்கலம் ரெத்தினம் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்து சூழ்ந்து கொண்ட
முனுசாமி மற்றும் சிலர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் உடலின் பல பாகங்களில் வெட்டுக்காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் கொலை தொடர்பாக போலீசார் அவரது உறவினர் முனுசாமி மற்றும் வீரையன், பெரியண்ணன், ரெங்கசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இசைக்கலைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடு துறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையன். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் இசை குழுவில் டிரம்ப் வாசித்து வந்தார். இவருக்கும் இவரது அக்காள் கணவர் முனுசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையையொட்டி மணிகண்டன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பொங்கல் முடிந்ததையடுத்து நேற்று இரவு தஞ்சையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்றார். அங்கு ஆராய தெருவில் நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர்.
இதில் வேகமாக ஓடிய மணிகண்டனை விரட்டி பிடித்து கீழே தள்ளி. அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மணிகண்டன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல்அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆதனூரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 38). இவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊரான ஆதனூருக்கு வந்தார். நேற்று அருகில் உள்ள சாம்பலம் ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கடினல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்துவிட்டார். சிகிச்சைக்காக வேதாரண்யம் நாகை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் கோடியக்காடு காளியாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (80). இவர் தனது மகன் புண்ணியமூர்த்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இவர் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். இந்நிலையில் கோடியக்கரை பம்ப்ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடுகிடப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை செய்ததில் மாயமான முதியவர் வீரபத்திரன் என அவரது உடையை வைத்து அடையாளம் கண்டனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பிபிடி என்னும் நெல் சாகுபடி செய்து வந்துள்ளனர்.
10 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம நோய் தாக்கி நெற்கதிர்கள் எல்லாம் பதராக உள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கியும், தனியாரிடம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்து வந்த விவசாயிகளுக்கு பெரும் அளவு விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனை அறிந்த திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் ரெங்கநாதன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதில் மர்ம நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.
மேலும் இந்த வருவாய் இழப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் அந்த பகுதி விவசாயிகள் விரிவாக்க மைய அலுவலரிடம் மனு அளித்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.
சீர்காழி:
சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்பாபு (வயது28). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் விஜய்பாபுவை தனிகுடித்தனம் செல்லுமாறு இவரது அண்ணன் வினோத் குமார்(30) கூறி வந்தார்.
இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி விஜய்பாபு ஆத்திரம் அடைந்து ஸ்குரு டிரைவரால் வினோத்குமாரை குத்தினார். இதில் வினோத்குமார் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ் பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜய்பாபுவை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் கிராமத்தில் 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (வயது 23) என்பவர் அந்த சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த சிறுமி விடுமுறையில் திருவாரூர் மாவட்டம், களப்பாலில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையறிந்த சக்திவேல் அந்த சிறுமியை அழைத்து வருவதற்கு தான் சென்றால் அனுப்பமாட்டார்கள் என்று நினைத்து அந்த சிறுமியின் உறவினரான பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த கபிலன்(25) என்பவரை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வந்து, சக்திவேலின் பாட்டி வீடான பஞ்சநதிக்குளம் கிராமத்திற்கு அழைத்து வந்து கட்டாய தாலிகட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை அறிந்த அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டு, வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து சக்திவேல், கபிலன் ஆகிய இருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






