search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர் கைது"

    • நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது33). பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணியும் (32) நண்பர்கள் ஆவர்.

    நேற்று இரவு நண்பர்கள் இருவரும் புழலில் உள்ள ஒரு கடையில் மது அருந்தினர். பின்னர் போதை அதிகமானதும் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மணி மீண்டும் மதுகுடிக்க நினைத்தார். இதையடுத்து அவர் நண்பர் சரவணன் வீட்டிற்கு சென்று மீண்டும் மதுகுடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் சரவணன் மதுகுடிக்க வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த மணி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
    • மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிட்டிக்கோடு கோலயம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது30). இவர் கடந்த வாரம் கல்லம்பலம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ராஜூ இறந்திருக்கிலாம் என்று முதலில் கருதப்பட்டது.

    ஆனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை யாரேனும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். ராஜூவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது ராஜூ இறந்து கிடந்த தினத்தன்று, அவரது நண்பரான சிட்டிக்கோடு வலிகாவு பகுதியை சேர்ந்த சுனில்(41) என்பவருடன் இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதனால் சுனிலை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த சுனில், பின்பு ராஜூவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

    அவர் குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று ராஜூவும், சுனிலும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சுனில் வைத்திருந்த மதுபான கோப்பையை ராஜூ தெரியாமல் தட்டி விட்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சுனில், ராஜூவுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ராஜூ அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றிருக்கிறார்.

    அவரை பின்தொடர்ந்து சென்ற சுனில், குளத்தின் கரையில் வைத்து ராஜூவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ராஜூவை தண்ணீரில் மூழ்கடித்து சுனில் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகு சுனில் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.

    நண்பரை கொன்ற சுனில், கடந்த ஒரு வாரமாக வழக்கம்போல் இருந்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை போலீசார் கைது செய்தனர்.

    மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் வந்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (35). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராமச்சந்திரன் சூரம்பட்டி கறிக்கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் அங்கு வந்து ராமச்சந்திரனின் பின்பக்க தலையிலும், வலது கையிலும் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கந்தன் என்கிற யோகமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இந்த ராமச்சந்திரனுக்கு தலையில் 13 தையல்களும், இடது கையில் 7 தையல்களும் போடப்பட்டன. அவர் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகமூர்த்தியின் மகனை ராமச்சந்திரன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த யோகமூர்த்தி, ராமச்சந்திரனை பழி வாங்க திட்டம் போட்டு வந்துள்ளார்.

    இதன்படி சம்பவத்தன்று ராமச்சந்திரன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த யோகமூர்த்தி அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் யோகமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சுரேஷ் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    சென்னை:

    ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இரவு மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் அருகில் கிடந்த கத்திரிக்கோலால் ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
    • மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி மேலத்தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இவரும், நவ்வலடி நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (46) என்பவரும் நண்பர்கள். இவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    நேற்று இரவு இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது முத்து, செல்வகுமாரின் மனைவி குறித்து பேசி உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் கையில் இருந்த கத்தியால் முத்துவை கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

    தகவல் அறிந்த உவரி போலீசார் அங்கு விரைந்து சென்று முத்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது மனைவி குறித்து பேசியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.

    ×