என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து துர்கா தேவி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெத்தி சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் விவேக் (25), காரைக்கால் தளத்தெருவை சேர்ந்த குமார் மகன் சேதுமணி (23), திருவாரூர் கொரடாச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் விஜய் (28) என்பதும், இவர்கள் தான் துர்காதேவியிடம் கத்தியை காட்டி 1 பவுன் சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    புகையிலை விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கீழ்வேளூர் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    நாகையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை எந்திரத்தை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் விற்பனை எந்திரத்தை நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆடியபாதம், சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார், நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    விற்பனை எந்திரத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். பொருட்கள் வாங்க வருவோர் நீண்டநேரம் காத்திருக்காமல் இருக்க புதிய விற்பனை முனைய கருவிகளை வழங்க வேண்டும். 4 ஜி சேவை கொண்ட சிம் கார்டு வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்கிருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுபதி விற்பனை எந்திரத்தை பெற முடியாது என கூறி திருப்பி அனுப்பினர். மேலும் அவர் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதாக கூறினார்.
    குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் மேலப்பாளையம் - திருநகரி சாலை சீர்செய்யப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் மேலப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளன. கடந்த ஆண்டு மேலப்பாளையம் கிராமத்தில் மட்டும் மேலப்பாளையம்- திருநகரி சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்காமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தற்போது மேலப்பாளையம் - திருநகரி சாலையில் பள்ளி வாகனம், லாரிகள் சிரமத்துடன் சென்று வருகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மேலப்பாளையம்-திருநகரி சாலை இதுவரை சீரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன்கருதி மேலப்பாளையம்- திருநகரி சாலை சீர்செய்யப்படுமா? என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    கீழ்வேளூா் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே வெண்மணி மேல காவலக்குடியை சேர்ந்த ஜெயராமன் மகன் மாதவன் (வயது25). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு. திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாதவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த மாதவன், அந்த பகுதியில் உள்ள பெரிய குளத்தில் இறங்கி உள்ளார். அப்போது அவா் குளத்தில் மூழ்கி மாயமாகினார்.

    இதுகுறித்து அந்த பகுதியினா் தெரிவித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடினா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. நேற்று காலையில் மாதவன் பிணமாக குளத்தில் மிதந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூா் போலீசாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பாிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

    இது தொடா்பாக கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    கீழ்வேளூா் பகுதியில் சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூா் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கூத்தூர் சுடுகாடு அருகில் சாராயம் விற்ற பட்டமங்கலம் வடிவேல் மகன் பாலமுருகன் (வயது20), கீழகாவாலக்குடி கருவை தோப்பில் சாராயம் விற்ற மோகனூரை சேர்ந்த முத்துவேல் (40) , கோவில் கடம்பனூர் மெயின்ரோட்டில் சாராயம் விற்ற செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கணேசன் (40), ஓர்குடி சுடுகாடு அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக் (30) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் கீழ்வேளூர், நெம்மேலி, இருக்கை, பட்டமங்கலம், தே.மங்கலம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன் இறங்கு தளம் அமைக்காததை கண்டித்து மீனவா்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்றத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சாமந்தான்பேட்டை மீனவர்கள், மீன் இறங்கு தளம் அமைக்காததை கண்டித்து சட்டமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன்பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இரவில் தீப்பந்தம் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    நேற்று முன்தினம் 3-வது நாளாக மீனவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் அறிவிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை உடனே அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

    இந்த நிலையில் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து அந்த மீனவா்கள் கூறுகையில், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் நாகை தாலுகா மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
    நாகையில் வீட்டை விட்டு தந்தையை வெளியேற்றியவரின் நில உரிமையை ரத்து செய்து உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கச்சனம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினவேலு(வயது73). இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். ரெத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை இளைய மகன் ஆனந்த் பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தானம் செட்டில்மென்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆனந்தும், அவரது மனைவியும் ரெத்தினவேலுவை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சளுக்கு ஆளான ரெத்தினவேலு நாகை உதவி கலெக்டர் பழனிகுமாரிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படி செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்ய பத்திர பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உதவி கலெக்டர் பழனிகுமார் நிலத்தை பெற்றுக்கொண்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய ஆனந்துக்கு ரெத்தினவேலு எழுதிக்கொடுத்த நில உரிமைக்கான ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கான ஆணை ரெத்தினவேலுவிடம் வழங்கப்பட்டது.
    நாகூர் பட்டினச்சேரியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூரில் பட்டினச்சேரி மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் கடல் நீர் ஊருக்குள் புகுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு ஊருக்குள் புகும் கடல்நீர் பல தென்னை மரங்களை் சாய்த்து வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கடல் நீர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    கடலுக்கும், மக்கள் குடியிருப்பு பகுதிக்கும் இடையேயான தொலைவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. இதனால் பட்டிச்சேரிக்குள் கடல் நீர் புகாதபடி கடற்கரையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    பட்டினச்சேரிக்குள் கடல் நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. சில சமயங்களில் புயல் எச்சரிக்கை அறிவித்த நிலையிலும், தொடர்ந்து கனமழை பெய்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டினச்சேரி கடற்கரையோரம் தடுப்பு சுவர்கள் அமைத்து கடல் நீர் உட்புகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணி அளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.

    வழக்கமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விண்மீன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக விண்மீன் ஆலயம் அருகில் உள்ள சேவியர் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், அரசு அறிவுரையின்படி பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இதற்காக பேராலயம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
    மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே திருமங்கலம் பகுதியில் பாலையூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நிறுத்தாமல் வேகமாக சென்ற காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சோதனையில் அந்த காரில் 500 லிட்டர் கள்ள சாராயம் இருந்ததும், அதனை காரைக்காலில் இருந்து கும்பகோணம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரையொட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (வயது28) என்பவரை கைது செய்து, பாலையூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×