search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலப்பாளையம்"

    • இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார்.
    • வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வசந்த் (வயது 22). செண்டை மேள இசைக் கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தை மீட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று வசந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யூ சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.டி.யூ. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் பாட்ஷா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்வத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிந்தா, காஜா, தங்கள் மைதீன், ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிரந்தர பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்ற கூடாது, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

    இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, மண்டல தலைவர் ஹைதர் இமாம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் குலசை தாகீர் மற்றும் மேலப்பாளையம் கசாலி, சுல்தான், செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. பாளை தொகுதி செயலாளர் சனா சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செய்யது மைதீன் நன்றி கூறினார்.

    • குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி இரவு வேலை முடிந்து மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அரிவாள்வெட்டு

    அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த குணசேகரனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    3 பேர் கைது

    இந்நிலையில் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் தொடர்புடைய கருங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகையா மகன் வெங்கடேஷ்(வயது 26), முத்தையா மகன் அன்பு(22), ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் உச்சிமாகாளி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

    சம்பவத்தன்று வெங்கடேஷ், அன்பு ஆகிய 2 பேரும் மதுபோதையில் குணசேகரனை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டத்திற்கு தப்பி சென்றதாகவும், அப்போது இசக்கிமுத்து அவருக்கு உதவியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட காதல் தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். கேக்கில் ஆதலால் காதல் செய்வீர் என எழுதப்பட்டிருந்தது. இதன் பின்னர் அவர்கள் எடுத்து வந்த ஜோடி புறாக்களை வானில் பறக்க விட்டும், இனிப்புகள் வழங்கியும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் சமத்துவம் பேசும் காதலர் தினத்தை வரவேற்போம் என கோஷம் எழுப்பினர்.

    காதலர் தினத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×