என் மலர்
நாகப்பட்டினம்
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
- மீன் வளடெக்னாலஜி, கோஸ்டல் என்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராமசாமி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பி.டெக் மீன்வள பொறியியல் முடித்தவர்களை மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி மீன்வள உதவி ஆய்வாளர் 24 பணியிடத்திற்கும், மீன்வள ஆய்வாளர் 64 பணியிடத்திற்கும் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் மீன் வளடெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.
மீன்வள பொறியியல் படித்தவர்களை மேற்கண்ட தேர்வுக்கு தகுதியாக சேர்க்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், மீன்வளத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மீன்வள பொறியியல் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் கடந்த ஜந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறவில்லை.
- மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நடுத்தெரு நடேசன் மகன் அருள் (வயது 30).லோடு மேனான இவர், தேவூர் கடைத்தெரு பகுதியிலுள்ள கடுவையாற்றில் கை கழுவ சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறாத நிலையில், அருகிலிருந்தவர்கள் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது கதி என்ன ஆனது என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
- கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
- கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.
- போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).
இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புறாக்கிராமம் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி மாணவ-மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கவாசகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிமுல் அன்சாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஏனங்குடி அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
- 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
- இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.
சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த "ஹிமாலய கிரிபன் கழுகு" மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.
தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.
இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும்.
இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன.
கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1 லட்சம் பறவைகளுக்கு மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்திலேயே இதுவரை 1 லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோடியக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறியதாவது:-
கோடியக்கரை பறவைகள் சரணலாயத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை சுற்றுலா பயணிகள் காணலாம்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது என்றார்.
- திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
- இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது:-
வைகோ பற்றிய ஆவணப்பட த்தை துரை வைகோ சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை.
அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
அது தவறான கருத்து என்பதற்கு வைகோவின் வாழ்க்கையே சான்று.
அவர் திராவிட இயக்கவாதியாகவும் தமிழ் தேசியவாதியாகவும் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். வைகோவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.
இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை. சமூக நீதியை காப்பாற்ற வைகோ தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ம.தி.மு.க. நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நாகை மாலி எம்.எல்.ஏ, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
- தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் சத்யபிரியாயை சதீஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ் அப்போது வந்த மின்சார ரயிலில் மாணவியை தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை அதிர்ச்சியில் மனமுடைந்து தற்ெகாலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
- மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.
வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
- முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இம்மாத புரட்டாசி கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு வீதியுலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வசந்த
மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மேளதாளத்துடன் வீதியுலாவிற்கு புறப்பாடான முருகப்பெருமானை திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருக பெருமானை வழிபாடு செய்தனர்.
- வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, நாகூர், கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுப்போன மற்றும் தொலைந்துப் போன கைப்பேசிகளை கண்டுப்பிடித்து தருமாறு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்ட சைபர் க்ரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தி தொலைந்து போன மற்றும் திருடுப்போன 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 75 கைப்பேசிகளை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவர்களிடம் நேற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஒப்படைத்தார்.






