என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
    • முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18--ந்தேதி நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-

    எம்.எல்.ஏ கேள்வி:

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளில் 2வது கோரிக்கையாக இதை கொடுத்துள்ளோம்.விவசாயிகள் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருமருகல்.

    நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.

    எனவே அங்கு அரசு நிர்வாக அமைப்புகள் எளிதில் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

    எனவே திருமருகலை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருமருகல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

    மாவட்ட கலெக்டர் வாயிலாக இதற்கான முன்மொழிவை அனுப்பி உள்ளீர்கள்.

    முதலமைச்சாடம் கலந்து பேசி நிச்சயமாக உங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • விவசாய கூலி தொழிலாளர்கள் வயலில் களை எடுத்தல் பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கத்திரிப்புலம் பனையடி குத்தகையில் சரண்ராஜ் என்பவரின் மகன் நாகராஜன் சவுக்கு சாகுபடி செய்து வருகிறார்.

    நேற்று மாலை இந்த சவுக்கு வயலில் களை எடுத்தல் பணி நடைபெற்றது. இதில் நாகக்குடையான் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது இடியுடன் மழை பெய்தது.

    இதில் மின்னல் தாக்கியதில் நாகக் குடையான் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த குஞ்சையன் மனைவி கமலா (45), சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நாகக்குடையான்பகுதியை சேர்ந்த ஆரவல்லி (60), ஜெயலட்சுமி(50), முத்தம்மாள்(50) ஆகிய 3 பேரும் அதிர்ச்சி அடைந்து மயங்கினர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த கரியாபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்னல் தாக்கி பெண் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • பணி பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவ–மனையில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ நாகைமாலியுடன் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான்சிம்சன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின் ராசரத்தினம், ஏ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

    அப்போது, கடந்த ஆட்சியின் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 11 ஆண்டுகளாக பழிவாங்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முதுநிலை பட்டியலின்படியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமலும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டும் கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடன் உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழியாக நிரப்பிட உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணிவிதி வெளியிட வேண்டும்.

    இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் அரவிந்தன்
    • சாக்பீசில் ‘அ’ என்ற எழுத்துக்களை வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன், சிறுவயது முதலே ஓவியம் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். 4000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள இவர், சோப்பு, பென்சில் முனை, சாக்பீஸ் போன்றவற்றில் கார்விங் முறையில் பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி தொடர்ந்து தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.


    இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 1330 குறட்பாக்களையும் பென்சில் முனையில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த எழுத்துக்களை வெறும் கண்ணால் பார்க்க இயலாது, லென்ஸ் மூலமாகவே பார்க்க முடியும்.

    இதேபோல் சாக்பீசில் 'அ' என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் மிகவும் நுணுக்கமாக வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார். இதற்காக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் செலவிட்டு, 7 நாளில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.


    அவரது சாதனையை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை நிற்க வைத்து திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார்.

    தனது கலைப் பயணம் பற்றி பேசிய அரவிந்தன், தொடர்ந்து முயற்சி செய்து கின்னஸ் சாதனை படைப்பதே தனது லட்சியம் என்கிறார்.

    • 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு ரூ. 100 செலவு.

    நாகப்பட்டினம்:

    22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து நாகையில் இரண்டாவது நாளாக மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்னதர்.

    அப்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம், அதிகாரிகள் ஆய்வுகுறுவை அறுவடை முடிந்த நிலையில் மழையால் நனைந்த நெல்லை கொள்முதல் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    அதனை தொடர்ந்து நேற்றைய தினம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனிடையே இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குநர், எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வில், கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளிடம் மத்திய குழுவினர் குறைகளை கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரி நெல்லை சேகரித்த மத்திய குழுவினர் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று சென்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் செலவு ஏற்படுவதாகவும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் தடைப்பட்டு நின்றால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதாக நினைக்காமல் அது நாட்டின் இழப்பு என கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வெண்மணி, வலிவலம், எட்டுக்குடி, உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
    • பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
    • மீன் வளடெக்னாலஜி, கோஸ்டல் என்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராமசாமி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பி.டெக் மீன்வள பொறியியல் முடித்தவர்களை மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.

    இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி மீன்வள உதவி ஆய்வாளர் 24 பணியிடத்திற்கும், மீன்வள ஆய்வாளர் 64 பணியிடத்திற்கும் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் மீன் வளடெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    மீன்வள பொறியியல் படித்தவர்களை மேற்கண்ட தேர்வுக்கு தகுதியாக சேர்க்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், மீன்வளத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மீன்வள பொறியியல் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் கடந்த ஜந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நிலை தடுமாறி ஆற்றில் தவறி‌ விழுந்தவர் கரையேறவில்லை.
    • மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நடுத்தெரு நடேசன் மகன் அருள் (வயது 30).லோடு மேனான இவர், தேவூர் கடைத்தெரு பகுதியிலுள்ள கடுவையாற்றில் கை கழுவ சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நிலை தடுமாறி ஆற்றில் தவறி‌ விழுந்தவர் கரையேறாத நிலையில், அருகிலிருந்தவர்கள் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அவரது கதி என்ன ஆனது என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
    • கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

    • கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.
    • போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).

    இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புறாக்கிராமம் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி மாணவ-மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கவாசகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிமுல் அன்சாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல், ஏனங்குடி அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    ×