என் மலர்
நாகப்பட்டினம்
- புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் சாய்ந்து மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.
- சம்பவஇடத்திலேயே பலியானர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை பெரிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமநாதன் (வயது 22).
இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் பயிற்சி மெக்கானிக்காக உள்ளார்.இந்த நிலையில் நேற்று முதல் நாள் நள்ளிரவில் சீயாத்தமங்கை கைகாட்டி அருகே மண் தரையில் புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் எதிர்பாராத நிலையில் சாய்ந்தபோது கொடி கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.
இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராமநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு முதல் நாளில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
- தீபாவளி பண்டிகையை அதன் சுற்றுபகுதியில் நரிக்குறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடுசுந்தரரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியா ற்றுபவர் வசந்தா . வேதாரண்யம் பகுதிகளில் நிறைய சமூக சேவைகளை ஆற்றுபவர்.
பற்றி மாணவர்களுக்கு மழை காலங்களில் பற்றி வருவது தடைபட கூடாது என கருதி இதுவரை ஜந்து ஆயிரம் குடைகளை பற்றி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார் அது போல் இதுவரை பொது மக்களுக்கு 5 லட்சம் முககவசம் வழங்கி உள்ளார்
பல்வேறுசமூகப் சேவை பணிகளுக்காக ஜம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.இவர் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நரிகுறவர்கள் ( நாடோடிகள்) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.
அதேபோல் இந்த ஆண்டும்வேதாரண்யத்தை அடுத்த அண்டர் காடு, ஆயக்காரன்புலம், வாய்மேடு ,தாணிக்கோட்டகம் மற்றும் இடும்பாவனம் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக குடிசைகளில் நிரந்தரமாக வசித்து வரும்40 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 125 க்கு மேற்பட்டவர்களுடனும் வீதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்த 50 நபர்களுடனும்தீபாவளியை கொண்டாடினார்.
இதில் கலந்துகொண்ட நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குஅன்பளிப்பு , புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், மற்றும் காலை உணவு வழங்கினார்
நிகழ்ச்சியில்சமூக ஆர்வலர் சித்திரவேல், மற்றும்ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்கலந்து கொண்டனர். படவிளக்கம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் நரிகுறவர்களுக்கு புத்தாடைகளை ஆசிரியை வசந்தா வழங்கினார்
- சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
- சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.
இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.
அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
- திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
- வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
நாகப்பட்டினம்:
மாமன்னர்கள் மருதுபாண்டியரின்1801-வது குருபூஜை விழாவில். திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் முக்குலத்துபுலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் வீர வணக்கம் செலுத்தினார்.
அதனையடுத்து சிவகங்கை கத்தபட்டு கிராமத்தில் வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
- அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தெத்தி ஊராட்சி பகுதியில் அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால், நல்லடக்கம் செய்ய நாகூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், எனவே தெத்தி பகுதியிலேயே அடக்கத்தலம் அமைத்துத் தர வேண்டுமென்றும், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தெத்தி பகுதியில் முஹையதீன் அப்துல் காதர் மரைக்காயர் டிரஸ்டுக்கு சொந்தமான வக்பு இடத்திலிருந்து, 44.43 சென்ட் பரப்பளவு இடம் அடக்கத் தலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக, தெத்தி பகுதி மக்கள் எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.
- கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
- கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், பெத்தாரண சாமி சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதில் கோதண்ட ராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்தனர்.
- கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.
இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது.
- வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட மீட்டா் கேஜ் பாதையில் ரயில் வந்து போனது. போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத போது வேதாரண்யம் மீன், உப்புக்கு இந்த ரயிலே பிரதானம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ரயில் தடம் ரூ. 288 கோடி செலவில் 10 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக மாற்றும் வேலை தொடங்கியது.
இப்போது வேலைகள் முடிந்து கடந்த 28.9.22 ரயில் இஞ்சினுக்கு மட்டும் 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நிகழ்ந்தது.
நேற்று 22.10.22 திருத்து றைப்பூ ண்டியிலிருந்து மதியம் 1 மணிக்குசோதனை ஓட்டம் தொடங்கி அகஸ்திய ம்பள்ளி வரை மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதனை வரவேற்கும் நிகழ்ச்சியாக அண்டா்காட்டை சோ்ந்த பல்வேறு விருதுகளை பெற்ற நல்லாசிரியர் மு.வசந்தா பள்ளி மாணவ, மாணவி்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ரயில் சேவையை வரவேற்கும் வகையிலங கவிதை பாடி வரவேற்றார்.
ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, தடக் தடக் ரயிலே ஓடி வா, தங்க ரதமே ஓடி வா, கூக்கூ ரயிலே ஓடி வா, கூட்ஸ் ரயிலே ஓடி வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, ஆதிரெங்கனை வழிபட்டு வா, மேலமருதூரில் மிதந்து வா, கரியாப்பட்டினத்தை கடந்து வா, குரவப்புலத்தில் நின்று வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா, நெய்விளக்கின் ஒளி கொண்டு வா, தோப்புத்துறையை தொட்டு வா, திருமறைக்காட்டு மான் போல் வா, அகத்தியா் பாதம் தொட்டிட வா, ரயிலே ரயிலே ஓடி வா, நன்றாய் ரயிலே ஓடி வா என கவிதை பாடியுள்ளார்.
- முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் எஸ்.பி. ஜவகரிடம் மனு அளித்தார்.
- குருபூஜை விழா பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் மற்றும் கட்சியினர் நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா, அக்டோபர் 24ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது.
முக்குலத்து புலிகள் கட்சியினர் வருடாவருடம் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ, மற்றும் எஸ்.பி ஜவகரிடம் மனு அளித்தனர்.
கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தேவர் அக்டோபர் 30 மற்றும் 24ம் தேதிகளில் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி.
நாகப்பட்டினம்:
நீத்தார் நினைவு நாளை யொட்டி, பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணமடைந்தனர்.
அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21- ம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, நீத்தார் நினைவு நாளான நேற்று நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவுத்தூனுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்.
கப்பல்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மேந்தர் சிங், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர்மற்றும் எஸ்.பி வழங்கினர்.
- திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
- ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி ப. கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜசேகர் (வயது53) கூலித்தொழிலாளி.
இவர் இரவு திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த மருங்கூர் நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராம்குமார் (22) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜசேகர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் ராஜசேகரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு ராஜசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிரே மோட்டார் சைக்கிள் வந்த ராம்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ், கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நாகூர் வீ.ஹெச்.எப் குடும்பத்தினர் மற்றும் திட்டச்சேரி நண்பர்கள் இணைந்து நடத்திய குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை நாகை தி.மு.க மாவட்ட செயலாளர் கெளதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
பந்தய தொலைவு குதிரைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய குதிரையில் சென்னை, கரூர், பேராவூரணி குதிரைகள் முதல் முன்று இடங்களை பெற்றது.
கரிச்சான் குதிரையில் திப்புராஜபுரம், நாகூர், பூண்டி குதிரைகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றது. புது குதிரையில் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் திருச்சி, அரதாங்கி குதிரைகளும், 2ம் நாகை, மதுரை குதிரைகளும், 3ம் திருச்சி, நாகூர் குதிரைகளும் பரிசுகளைப் பெற்றன.
வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.
இதில் நாகூர் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், திட்டச்சேரி அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல் பாசித், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, வி.ஹெச்.எப் குடும்பத்தார் நூர்சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.






