என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    பலியான ராமநாதன்.

    திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் சாய்ந்து மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.
    • சம்பவஇடத்திலேயே பலியானர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை பெரிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமநாதன் (வயது 22).

    இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் பயிற்சி மெக்கானிக்காக உள்ளார்.இந்த நிலையில் நேற்று முதல் நாள் நள்ளிரவில் சீயாத்தமங்கை கைகாட்டி அருகே மண் தரையில் புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடி கம்பத்தில் எதிர்பாராத நிலையில் சாய்ந்தபோது கொடி கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு ராமநாதனை மின்சாரம் தாக்கியது.

    இதில் ராமநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராமநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தீபாவளிக்கு முதல் நாளில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    Next Story
    ×