என் மலர்
மயிலாடுதுறை
- தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் கிராமத்தில் அய்யாவையனாற்றில் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தழிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது.
அதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நிலையில்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் பலன் தரும் வகையில் சட்ட திட்டங்கள் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.
2020-21 ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூரைவீடு பகுதி 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் கனமழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தபின் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கனமழை பெய்த காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 50செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
இது வரலாறு காணாத மழை அளவு ஆகும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டது முதலமைச்சர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 2,06,521 துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு 36 மணி நேரத்திற்குள் மீண்டும் சீரான மின் விநியோகம் தரப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வடிகால் வாரி என்று சொல்லக்கூடிய வெள்ள உப்பனாரு, கல்மனையாறு 2,700 கன அளவு கொள்ளளவு கொண்டது. ஆனால் கனமழையின் பொழுது 25,000 கனஅடி தண்ணீர் சென்றது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கனமழையால் மாவட்டத்தில் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
வருவாய்துறை அமைச்சர் அறிவித்தப்படி கூரை வீடு பகுதி பாதிப்பு, முழுமையான பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி வழங்குவார்கள் கூரைவீடு பகுதி பாதிப்பு 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும், ஓட்டு வீடு பாதிப்பு 586 வீடுகளும் இது வரை சேதமடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான மழையின் காரணமாக 246 மாடுகளும், 162 கன்றுகளும், 856 ஆடுகளும் இறந்துள்ளன.
மாவட்ட முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,824 குடும்பங்களுக்கு மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, இது தொடர்ந்து உணவு வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் நிவராணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூரைவீடு பாதி பாதிப்புக்கு ரூ.4,100, முழுமையான பாதிப்பிற்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. புத்தகங்கள் மிக குறுகிய காலத்தில் அதுவும் குறிப்பாக இரண்டொரு தினங்களில் புத்தகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, .ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,
சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, ஊரகவளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய கோவில்.
- காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஸ்தலமாகவும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவதாகவும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலில் தேரோட்டம் நான்கு வீதிகளில் வலம் வந்தது.
இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரெங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி சன்னதியை வந்தடைந்தது.
பின்னர் மதியம் 1:30 மணி அளவில் நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நிர்வாக அலுவலர் ரம்மியா, கோயில் அலுவலர் விக்னேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொன் சாமிதரிசனம் செய்தனர்.
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30 ஆயிரம் வழங்க வேண்டும்.
- மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா தாளடி 87000 ஏக்கர் நிலங்கள், மழையால் பாதிக்கபட்டும்,
257 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டும் பாதிக்கபட்டு இருந்தது.
இந்த பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கூர் அருகே தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த நெற்பயி ர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயி களிடம் கேட்டறிந்தார் பின்னர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரன உதவி பொருட்கள் வழங்கினார்.
அவருடன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
மயிலாடுதுறை மாவட்டம் சிறிய மாவட்டம். தற்போது, தரங்கம்பாடி, சீர்காழி பகுதிக்கு மட்டும் நிவாரணம் வழங்கபட்டுள்ளது. அதை, மயிலாடுதுறை குத்தாலம் பகுதிக்கும் அதிகரிக்க வேண்டும், நெற்பயிர் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30, ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ.3. ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
- கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- தருமபுரம் ஆதீனம் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
- தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீவதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் துலா உற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
இந்த தேரோ ட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்தம் பிரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், தென் மண்டல கட்டளை விசாரனை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோயில் சந்நதியை வந்தடைந்தது. பக்தர்கள் பக்தியுடன் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார், கண்காணிப்பாளர் அகோரம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொன்டனர்.
- வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
- சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,
மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.
அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம்.
- விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழை நிவாரணம் ரூ. 10ஆயிரம்.
சீர்காழி:
கனமழை பாதித்த சீர்காழி பகுதியை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது, கனமழையால் சீர்காழி வட்டாரத்தில் 40ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.2021 - 22 பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதுடன் 100சதவீதம் மானியத்தில் உரம் வழங்கிடவேண்டும்.
2022 - 23 பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கிடைத்திட உத்திரவாதம் அளித்திடவேண்டும்.சிறப்பு திட்டத்தின்கீழ் அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்திடவேண்டும், விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழைநிவாரணம் ரூ.10ஆயிரம் வழங்கிடவேண்டும், மழையால் சேதம்அடைந்த கிராமப்புற, நகர்புற சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
- சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை, நிவாரணமும் வழங்கவில்லை.
இதனால் வாழ்வாதாரம் இழந்து சமைப்பதற்கு கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமபடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்.
- தருமபுரம் ஆதீனம் மாணவர்களை பாராட்டி அருளாசி வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் குருஞான சம்பந்த மிஷன் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களை பள்ளியின் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவர் முருகேசன், நிர்வாக செயலர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், முதல்வர் சரவணன், போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் சீர்காழி வெள்ளக்காடானது.
- தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை பிடுங்கி விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் காண்பித்து பாதிப்பு குறித்து கூறினர்.
சீர்காழி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கன மழை பெய்தது.
122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் சீர்காழி வெள்ளக்காடானது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளையும், 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி சென்றார். மேலும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதிக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார்.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட நல்லூர், அகர வட்டாரம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை பிடுங்கி விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் காண்பித்து பாதிப்பு குறித்து கூறினர். தொடர்ந்து சீர்காழி அருகே உப்பநாற்றுக்கரை உடைந்து சூரக்காடு கீழத்தெரு பகுதியில் 350 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு சட்டநாதபுரத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.






