search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்- அமைச்சர் பேட்டி
    X

    கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறுவர்களுக்கு பிஸ்கட், பிரட் ஆகியவற்றை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    கனமழையால் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்- அமைச்சர் பேட்டி

    • கூரைவீடு பகுதி 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் கனமழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தபின் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கனமழை பெய்த காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 50செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    இது வரலாறு காணாத மழை அளவு ஆகும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டது முதலமைச்சர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 2,06,521 துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு 36 மணி நேரத்திற்குள் மீண்டும் சீரான மின் விநியோகம் தரப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வடிகால் வாரி என்று சொல்லக்கூடிய வெள்ள உப்பனாரு, கல்மனையாறு 2,700 கன அளவு கொள்ளளவு கொண்டது. ஆனால் கனமழையின் பொழுது 25,000 கனஅடி தண்ணீர் சென்றது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கனமழையால் மாவட்டத்தில் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    வருவாய்துறை அமைச்சர் அறிவித்தப்படி கூரை வீடு பகுதி பாதிப்பு, முழுமையான பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி வழங்குவார்கள் கூரைவீடு பகுதி பாதிப்பு 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும், ஓட்டு வீடு பாதிப்பு 586 வீடுகளும் இது வரை சேதமடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான மழையின் காரணமாக 246 மாடுகளும், 162 கன்றுகளும், 856 ஆடுகளும் இறந்துள்ளன.

    மாவட்ட முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,824 குடும்பங்களுக்கு மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, இது தொடர்ந்து உணவு வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் நிவராணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூரைவீடு பாதி பாதிப்புக்கு ரூ.4,100, முழுமையான பாதிப்பிற்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சில இடங்களில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. புத்தகங்கள் மிக குறுகிய காலத்தில் அதுவும் குறிப்பாக இரண்டொரு தினங்களில் புத்தகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, .ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, ஊரகவளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×