என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30 ஆயிரம் வழங்க வேண்டும்.
- மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா தாளடி 87000 ஏக்கர் நிலங்கள், மழையால் பாதிக்கபட்டும்,
257 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டும் பாதிக்கபட்டு இருந்தது.
இந்த பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கூர் அருகே தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த நெற்பயி ர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயி களிடம் கேட்டறிந்தார் பின்னர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரன உதவி பொருட்கள் வழங்கினார்.
அவருடன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
மயிலாடுதுறை மாவட்டம் சிறிய மாவட்டம். தற்போது, தரங்கம்பாடி, சீர்காழி பகுதிக்கு மட்டும் நிவாரணம் வழங்கபட்டுள்ளது. அதை, மயிலாடுதுறை குத்தாலம் பகுதிக்கும் அதிகரிக்க வேண்டும், நெற்பயிர் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30, ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ.3. ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






