என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கான விளையாட்டு, கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்து நீடூர் ஊராட்சி நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதில் எல்.கே.ஜி. குழந்தை களுக்கான ரப்பர் தரைத்தளம் கொண்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

    பள்ளித் தாளாளர் இராமன் தலைமை தாங்கி னார். தனியார் கல்லூரி தலைவர் ஜாபீர் மற்றும் பர்வீன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியா வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம் மற்றும் கலையரங்கம், அறிவியல் கண்காட்சிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது கலெக்டர் தன்னுடைய பள்ளிகால நிகழ்வுகளை எடுத்து கூறினர். ஆசிரியர்கள் மாணவர்களை தங்களுடைய சொந்த குழந்தைகள் போல் போற்றி அவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அதாவது ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சமமாக நினைத்து அவர்களை வளர்க்க வேண்டும்.

    கல்வி தான் ஒரு குழந்தைக்கு சரியான அணிகலன் எனவும் நன்றாக படிக்கவும், விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

    பிறகு மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்ற முகமது மோசின்க்கு நினைவு பரிசினை மாவட்ட கலெக்டர் வழங்கினர். பின்னர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் மகேந்திரன், வி.ஏ.ஒ. பஞ்சநாதன், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொன்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரானிஸ் நன்றி கூறினார்.

    • 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.

    • குப்பைகள் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு, சரும பாதிப்பு ஏற்படுகிறது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சமூக ஆர்வலர் ராம்பிரபு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது :

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பிரதான கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் மூலம் கொள்ளிடம் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.

    இந்நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றுஇடம் இல்லாததால் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

    இவ்வாறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.

    அதோடு குப்பைகள் ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீருடன் அடித்து சென்று கடலிலும் கலந்து வருகிறது.

    இந்த குப்பைகள் ஆற்றில் அடித்து செல்லப்படும்போது நெகிழிகள் புதைந்து கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு போன்ற சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாசு அடைந்த ஆற்று நீரை பருகும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம்.
    • குடிநீர் தட்டுப்பாடு, இலவச மனைபட்டா வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் கவிதா வரவேற்றார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ. அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் தெருவில் உடனடியாக 60 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கிடவேண்டும் என்றார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சிவபாலன்பேசுகையில், கோதண்டபுரம் நீரேற்றும் பணியாற்றுபவருக்கு சம்பளநிலுவையில் இருப்பதால் 6பஞ்சாயத்துக்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    லெட்சுமி பாலமுருகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளையும் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2 கோடியே 122 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்றார்.

    ரீகன் பேசுகையில், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    தலைவர் (பொ) பானுசேகர் பேசுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்கவேண்டும். இதனை இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஏற்றி நிறைவேற்றம் செய்யவேண்டும் என்றார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய மேலாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.

    • கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு கடலில் மூழ்கியது.
    • பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    சீர்காழி:

    கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு கடலில் மூழ்கியது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட 4 மீனவர்கள் இன்று அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசை படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.

    இதனை கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் வானகிரி மீனவர்கள், மாற்று படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    • பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.
    • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இணை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, இடைநிலை கல்வி அலுவலர் தியாகராஜன், தொடக்க கல்வி பார்த்தசாரதி மற்றும் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, வேழமுறித்தான் பேட்டை தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ஞானசேகர், வளமைய மேற்பார்வையாளர் முருகையன், வட்டார கல்வி அலுவலர் பவுலின் கலை விழாவின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.

    முன்னதாக மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் ஜானகி அனைவரையும் வரவேற்றார்.

    ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கணியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கலை திருவிழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.

    9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    முடிவில் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
    • பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், திருஞா னசம்பந்தம், மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட செயலாளர் ஜவகர் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஜூலை 1-ல் இருந்து முடித்து வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

    தொடக்க கல்வித்து றையில் நடைபெறும் எண்ணற்ற எழுத்தும் பயிற்சி மற்றும் சி.ஆர்.சி. பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்த ப்பட்டது.

    முடிவில் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
    • அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.

    இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

    மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

    அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.

    முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.

    பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
    • தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

    நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.

    முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.

    • தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகேகதிராம ங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருவேங்கடம் 33-ம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்று கள் நடப்பட்டது.

    விழாவை கதிராமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி வட்டா ரக்கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

    • பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
    • சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி திருக்கோலக்காவில் ஓசை நாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர் சாமி கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சூரிய பகவான் சுவாமியுடன் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிறு சூரிய புஷ்கரணி விழாவாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி நிகழாண்டு சூரிய புஷ்கரணி விழாவையொட்டி விநாயகர், தாளபுரீஸ்வரர் சுவாமி, ஓசை நாயகி அம்மன், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் மூஞ்சூர், காமதேனு, ரிஷப, மயில் வாகனங்களில் சூரிய புஸ்கரணிக்கு எழுந்தருளினர்.

    அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×