search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
    X

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

    • பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம்.
    • குடிநீர் தட்டுப்பாடு, இலவச மனைபட்டா வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் கவிதா வரவேற்றார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ. அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் தெருவில் உடனடியாக 60 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கிடவேண்டும் என்றார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சிவபாலன்பேசுகையில், கோதண்டபுரம் நீரேற்றும் பணியாற்றுபவருக்கு சம்பளநிலுவையில் இருப்பதால் 6பஞ்சாயத்துக்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    லெட்சுமி பாலமுருகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளையும் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2 கோடியே 122 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்றார்.

    ரீகன் பேசுகையில், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    தலைவர் (பொ) பானுசேகர் பேசுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்கவேண்டும். இதனை இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஏற்றி நிறைவேற்றம் செய்யவேண்டும் என்றார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய மேலாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.

    Next Story
    ×