என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.
    • பா.ஜ.க மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டம் எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.

    சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றார். பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளான கடலூர் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்கு மரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கர் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவர் வைரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
    • மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
    தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

    புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கிராம உத வியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் இரா. லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்குப் பின் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி தமிழக முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடை பெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பதவிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    2119 நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காகளிலும் தேர்வு நடைபெற்றது.

    அதில் தமிழில் படிப்பதை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் படிப்பதை எழுத வேண்டும். ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அலை பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திறன் தேர்வு வட்டாட்சியர் தலைமை குழு அமைத்து அதன் கீழ் கமிட்டி அமைத்து நடைபெற உள்ளது.

    இதில் வந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம். என கலெக்டர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

    இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், சமூக நலத்துறை தாசில்தார் தையல்நாயகி, தலைமை இடத்து துணை வட்டாச்சியர் தெட்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

    • பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சம்சூதீன்சாதிக்பாஷா தலைமையில் சாம்ஜோசப் பாடலை எழுதி இசை அமைத்து உலக அளவில் நல் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால் பந்து போட்டியை மிக நேர்த்தியாகவும் அனைவரும் பிரமிக்கும் அளவிலும் நடத்திக்கொண்டு வருகிறது.

    உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் தோகாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.கத்தாரில் அனைத்து நாட்டின் மக்களும் வசித்துவரிக்கின்றனர், பெரும்பான்மையாக தமிழர்களும், மலையா ளிகளும் உள்ளனர். அவர்கள் கால்பந்து போட்டியை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

    கால்பந்து போட்டிக்கான பீபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    கத்தார்-உலக கால் பந்து போட்டி க்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை கத்தார் அரசு ஆதரித்து இசைவெளிட்டு விழா நடைபெற்றது.

    அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்தப்பாடலை தமிழ் மகன் அவார்ட்ஸ்-ன் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா இயக்கி உள்ளார். சாம் ஜோசப் இசை அமைக்க, பாடகர்.ஆனந்த் அரவிந்தாக்சன் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

    தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய கத்தார் தொலைக்காட்சி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    • நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
    • தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

    அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.

    இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.

    இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.

    தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
    • சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ரூ.22.65லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    அகணி ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டமுடிவு செய்யப்பட்டு எம்ஜிஎன்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.12லட்சத்து 65ஆயிரம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10லட்சம் என மொத்தம் ரூ.22.65லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் நந்தினிபிரபாகரன் வரவேற்றார்.சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தியாக.விஜயேஸ்வரன், தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் சசிக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்வேணி, சமூக ஆர்வலர் கோ.அ.ராஜேஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் வீரமணி நன்றிக்கூறினார்.

    • சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.
    • 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றுனர்.

    தரங்கம்பாடி:

    சோழமண்டலம் அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.

    இதில் சோழமண்டலத்துக்குள் தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர.

    வெற்றி பெறும் முதல் 10 இடங்களை பிடிக்கின்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக செயலர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் அசோக், துணைச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆனந்த் தமிழ் வேந்தன் வரவேற்றார். ஏராளமான மாணவ.மாணவியர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர்.

    • சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
    • 3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் தாழஞ்சேரி ஊராட்சி, வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூர் வழியாக கடக்கம் வரை சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.

    பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட குழு உறுப்பினரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும்மான இளையபெருமாள், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபான்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் வி.சி.க.வினர் மற்றும் ஒரு சமூகத்தினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு அதே இடத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் தங்களது புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர்.

    இதுதொடர்பாக மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் நேற்று இரவு (5.12.22) 10 மணி முதல் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அப்பகுதியில் இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை செய்யப்படுவதாகவும் புதிதாக படத்திற்கு யாரும் மாலை மரியாதை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து பட்டவர்த்தி மதகடி பகுதியில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். 21 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேன்கள் மூலம் பள்ளி செல்வதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டவர்த்தியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    காலை முதலே வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம் ஆகியவை மதகடி பகுதியில் வரவழைக்கப்பட்டு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

    • துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
    • துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் 4 மணி நேரம் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராம குள த்தங்கரையில் உள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ தேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை குளிச்சார்செல்வம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×