என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் கிராம உதவியாளர் தேர்வு-கலெக்டர் லலிதா ஆய்வு
- ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
- தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கிராம உத வியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் இரா. லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி தமிழக முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடை பெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பதவிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
2119 நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காகளிலும் தேர்வு நடைபெற்றது.
அதில் தமிழில் படிப்பதை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் படிப்பதை எழுத வேண்டும். ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அலை பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திறன் தேர்வு வட்டாட்சியர் தலைமை குழு அமைத்து அதன் கீழ் கமிட்டி அமைத்து நடைபெற உள்ளது.
இதில் வந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம். என கலெக்டர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், சமூக நலத்துறை தாசில்தார் தையல்நாயகி, தலைமை இடத்து துணை வட்டாச்சியர் தெட்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்