search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீனிவாச பெருமாள்- வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    சீனிவாச பெருமாள்- வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராம குள த்தங்கரையில் உள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ தேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை குளிச்சார்செல்வம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×