search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சாலைகளில் அள்ளப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு
    X

    சாலையோரம் கிடக்கும் குப்பைகள்.

    சீர்காழி சாலைகளில் அள்ளப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு

    • நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
    • தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

    அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.

    இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.

    இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.

    தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×