என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akani Panchayat"

    • திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
    • சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ரூ.22.65லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    அகணி ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டமுடிவு செய்யப்பட்டு எம்ஜிஎன்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.12லட்சத்து 65ஆயிரம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10லட்சம் என மொத்தம் ரூ.22.65லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் நந்தினிபிரபாகரன் வரவேற்றார்.சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தியாக.விஜயேஸ்வரன், தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் சசிக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்வேணி, சமூக ஆர்வலர் கோ.அ.ராஜேஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் வீரமணி நன்றிக்கூறினார்.

    ×