என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சட்டைநாதர் கோவிலில் கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரமபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது.

    முதல் நாளாக ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி வழிபாடு நடந்தது.

    முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் தொடங்கியது.

    வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க யாகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து தருமபுபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.

    இதில் திருப்பணி உபயதாரர்கள் மார்கோனி, சரண்ராஜ், முரளிதரன், சுரேஷ், மற்றும் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மாணவர்களின் நலன் கருதி செங்கல்லால் தரமாக கட்டித்தர வேண்டும்.
    • செங்கல்லுக்கு பதிலாக சிமெண்டு கற்கள் வைத்து கட்டப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    ஒன்றிய குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணைத் தலைவர் பானுசேகர் முன்னிலை வகித்தார்.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்பழகன்,சிவபாலன், அங்குதன்,லட்சுமி பாலமுருகன் உள்ளிட்டோர் தங்களது பகுதி குறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பாமக உறுப்பினர் அன்பழகன் பேசும்போது கொள்ளிடம் பகுதியில் பிரதான இடங்கள் பலவற்றில் சாலையோரம் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.

    மேலும் மாதிரவேளூர் கிராமத்தில் பள்ளி கட்டடம் செங்கல் இன்றி சிமென்ட் கல்லால் கட்டப்படுவதாக தெரிய வருகிறது. மாணவர்களின் நலன் கருதி செங்களால் தரமாக கட்டவேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து பேசிய தலைவர் ஜெயபிரகாஷ் கூறும்போது, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் போலீஸ் துணையுடன் உடனடியாக அகற்றப்பட்டு அங்கு ஊராட்சி குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் வேட்டங்குடி பள்ளி கட்டிடம் ஒரு மாதத்தில் கட்டப்படும். மாதிரவேளூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் செங்கல்லுக்கு பதிலாக சிமென்ட் கற்கள் வைத்து கட்டப்பட்டு வருகிறது.

    அதனை உடனடியாக நிறுத்திவிட்டு செங்கல்லை மட்டுமே பயன்படுத்தி பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஒன்றிய பொறியாளர் பலராமன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய பொறியாளர் பூர்ணசந்திரன் நன்றி கூறினார்.

    • டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மயிலாடு துறையில் உள்ள யூனியன் கிளப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும், இதில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    எனவே, வேலை தேடுபவர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சா ன்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடை யலாம். மேலும், இதில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண். 04364-299790-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி அருகே இலுப்பூர் கிராமம், அரசலங்குடியைச் சேர்ந்தவர்

    இளங்கோவன் (வயது 49). இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளது

    இவர் பூம்புகாரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது.

    இந்த பஸ் அரும்பாக்கம் அருகே சென்ற போது இளங்கோவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இளங்கோவன் படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.

    சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

    மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும்.
    • காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நியாயவிலை கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவர்.

    டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலை கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

    முதல்கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம், அருவாப்பாடி, ஆத்தூர், பூதங்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், அகரபெருந்தோட்டம், அகரவட்டாரம், அளக்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளிலும்,

    குத்தாலம் வருவாய் வட்டத்தில் ஆலங்குடி, அனந்தநல்லூர், அரிவேளூர், அசிக்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆனைக்கோயில், அனந்தமங்கலம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக்கடை பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    2-ம் கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் அகரகீரங்குடி, ஆனைமேலகரம், அருண்மொழித்தேவன், சோழம்பேட்டை உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், ஆதமங்கலம், அகணி, அகரஎலத்தூர், ஆலங்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், குத்தாலம் வருவாய் வட்டத்தில் கீழையூர், குத்தாலம், மாதிரிமங்கலம், மேக்கிரிமங்கலம், மேலையூர் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் அகராதனூர், அகரவல்லம், அரசூர், அரும்பாக்கம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக்கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டரின் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04364-

    222588. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இக்கோவிலில், கடந்த மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சொக்கநாதர்பெருமான் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.இங்கு திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மலைமீது தோணியப்பர், சட்டைநாதர்சுவாமி அருள்பாலிக்கின்றனர்.

    பிரசித்திப்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று புதன்கிழமை தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறுகிறது.மண்டலாபிஷேக பூர்த்தி விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து தருமபுரம் ஆதீனம் தருமபுரம் பூஜா மூர்த்தியான சொக்கநாதர் பெருமானுடன் ரதத்தில் சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தடைந்தார்.தொடர்ந்து மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர்பெருமான் எழுந்தருளசெய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதரிசனம் செய்தனர்.

    சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு சொக்கநாதர் பெருமானுடன் வருகை புரிந்த தருமபுரம் ஆதீனத்துக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    • மாரத்தான் போட்டியில் மாணவன் விஷ்வா முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    தஞ்சாவூர் அத்லடிக் அசோசியேட் மற்றும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இனணந்து நடத்திய பசுமை பூமி கும்பகோணம் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

    இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8-மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 12ஆம் வகுப்பு மாணவன் வி. விஷ்வா முதலிடத்தில் வெற்றி பெற்று ரூபாய். 5,000 மற்றும் சான்றிதழ் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர்கள் பேராசிரியர் முருகேசன், ஞானசேகரன் ஆட்சிமன்றக்குழு செயலர் எஸ். பாஸ்கரன் நிர்வாகச் செயலர் வி.பாஸ்கரன் , பொருளாளர் சுப்பிரமணியன் முதல்வர் சரவணன் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

    • பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை இருப்பது தெரியவந்தது.
    • அப்பகுதி மக்கள் பூக்கள் தூவி வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செறுடம்பனூர் கிராமத்தில் சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.

    பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்த போது சத்தம் கேட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த இடத்தை தேண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு சுமார் , 5 அடி உயரத்தில் பழமையான பெருமாள் சாமி கருங்கல் சிலை என்பது தெரியவந்தது.

    உடனே அப்பகுதி மக்கள் பூக்கள் வைத்து வழிபட்டனர்.

    தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரணவணன் மற்றும் பொறையார் போலீசார் அங்கே சென்று சாமி சிலையை பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த பகுதியில் பழங்காலத்தில் கோவில் ஏதாவது இருந்ததா அல்லது மழை வெள்ளத்தில் சிலை அடித்து வரப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
    • மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ம், தரங்கம்பாடி தாலுகாவில் பெரிய மடப்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செம்பனார்கோவில், ஆக்கூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதனால், இக்கிராம த்துக்கு மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி காவேரி டெல்டா பாசனதாரர் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு கோபிகணேசன் தலை மையில் பெரியமடப்புரம், மாத்தூர், முக்கரும்பூர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கதுறை சார்பில் பொதுமக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களை பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார். மயிலாடுதுறை போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு வேணுகோபால் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிராக வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் சீர்காழி (பொறுப்பு) காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மணிப்பூரில், அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி அமைதி பேரணி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்ற பேரணியானது புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் மணிப்பூரில் பொது அமைதி நிலவிட வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மற்றும் திருப்பலி நடை பெற்றது.

    பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகு வர்திரி ஏந்தி அமைதியாக பேரணியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    ×